புதுடெல்லி:கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக தகீ அஹ்மத் என்பவரை கைது செய்ய டெல்லிக்கு சென்ற மூன்று மும்பை ஏ.டி.எஸ் அதிகாரிகளை டெல்லி போலீஸ் கைது செய்தது. உள்ளூர் போலீசுக்கு தகவல் கொடுக்காமல் அவர்களுடைய அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் இருந்து ஒருவரை கைது செய்ய
முயன்றதால்3 ஏ.டி.எஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
குண்டுவெடிப்பு தொடர்பாக முன்னர் கைதான நகீ அஹ்மதின் சகோதரர்தாம் தகீ அஹ்மத். மும்பை ஏ.டி.எஸ்ஸின் முன்பாக ஆஜராகுமாறு கூறி நேற்று தகீ அஹ்மதின் வீட்டிற்கு ஏ.டி.எஸ் அதிகாரிகள் சென்றனர். உள்ளூர் போலீஸார் வராமல் தகீயை கொண்டு செல்ல அனுமதிக்கமாட்டோம் என்று அவரது வீட்டினர் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏ.டி.எஸ் அதிகாரிகள் தகீயை தாக்க துவங்கியுள்ளனர். பின்னர் தகீயின் வீட்டில் உள்ளவர்கள் உள்ளூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். போலீஸார் அங்கு வந்து ஏ.டி.எஸ் அதிகாரிகளை கைது செய்தனர்.
ஏ.டி.எஸ் மீது தகீயின் குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். அதிகார எல்லையை மீறி ஒருவரை கஸ்டடியில் எடுக்க முயன்றது, உடல்ரீதியாக கொடுமைப்படுத்தியது, மிரட்டல் விடுத்தது ஆகிய குற்றச்சாட்டுகள் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னர் கைதான நகீ அஹ்மத் டெல்லி ஸ்பெஷல் ப்ராஞ்சின் இன்ஃபார்மராக செயல்பட்டவர் என்ற செய்தி சர்ச்சையை கிளப்பியிருந்தது.
மும்பை குண்டுவெடிப்பு நிகழ்ந்து 6 மாதங்கள் கழிந்த பிறகும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாத மும்பை ஏ.டி.எஸ் வழக்கம்போல முஸ்லிம்களின் தலையில் குண்டுவெடிப்பின் பொறுப்பை கட்டிவைக்கும் முயற்சியில் அபத்தங்களையும், அடாவடித்தனங்களையும் புரிந்து வருகிறது.
தற்போதைய மஹராஷ்ட்ரா தீவிரவாத தடுப்பு படை(ஏ.டி.எஸ்) தலைவர் ராகேஷ் மரியாவுக்கு சங்க்பரிவாரத்தோடு மிருதுவான அணுகுமுறை இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக