புதன், பிப்ரவரி 01, 2012

பார்சல் குண்டு வழக்கில் தமுமுக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை !

சென்னை: பார்சல் குண்டு மூலம் இந்து முன்னணி தலைவரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ரிபாயி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 1995ம் ஆண்டு நாகூரைச் சேர்ந்த இந்து முன்னணித் தலைவரான முத்துக்கிருஷ்ணன் வீட்டுக்கு தபால் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்த முத்துக்கிருஷ்ணனின் மனைவி தங்கம், அதில் இருந்த வெடிகுண்டு வெடித்துப் பலியானார்.

இந்த வழக்கில் ரிபாயி,குத்புதீன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் தற்போது ரிபாயி, குத்புதீன் ஆகியோர் ஜாமீனில் வெளியே உள்ளனர். சமீபத்தில்தான் ரிபாயி, தமுமுக மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வழக்கில் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், ரிபாயி, குத்புதீன் மற்றும் புழல் சிறையில் உள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், மற்ற இருவரை விடுவித்தும் உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக