கூடங்குளம் அணு மின்நிலயம் தொடர்பாக 4வது காட்ட பேச்சு வார்த்தை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் என மத்திய நிபுணர் குழு அறிவித்திருந்தது. இதில் மத்திய நிபுணர் குழு சார்பாக முத்துநாயகம் தலைமையில், 12 பேர் வந்திருந்தனர். அணு உலை எதிர்ப்பு போராட்ட குழுவின் மக்கள் தலைவர் உதயகுமார் தலைமையில் கிராமத்து மக்கள் ஜீப், மற்றும் வேன்களில் வந்தனர். இவர்கள் வந்த வாகனங்கள் கலெக்டர் அலுவுலகத்தில் நுழையும் பொழுது அங்கே திட்டமிட்டு காத்திருந்த சுமார் 20 இந்து முன்னணியினர் கிராம மக்கள் வந்த வாகனங்கள் மீது கற்களை வீசி கடும் தாக்குதலில் ஈடுபட்டனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தை எதிர்க்கும் மக்களுக்கும் மத்திய நிபுணர் குழுவுக்கும் நடக்க இருந்த பேச்சு வார்த்தையில் இந்து முன்னணியினருக்கு என்ன வேலை. அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை காந்திய வழியில் நடத்தி உலகின் தலை சிறந்த மக்களாக கூடங்குளம் மக்கள்விளங்குகின்றனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.
இப்படி அமைதி வழியில் போராடும் ஒரு மக்களை வலுக்கட்டாயமாக கலவர பாதைக்கு அழைத்து சொல்லும் ஒரு வேலையை இந்து முன்னணி செய்துள்ளது. இந்து முன்னணிகலவரக்காரர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதும் அந்த மக்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். கூடங்குளம் பகுதியை சேர்ந்த வீரமான கிராமத்து பெண்கள் இந்து முன்னணிகாடையர்களுக்கு பதில் அடி கொடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவியது.
இந்த பேச்சு வார்த்தையில் புகுந்து கலவரத்தை உண்டாக்குவதன் மூலம் கூடங்குளம் மக்களின் அமைதி போராட்டத்தை பற்றிய ஒரு தவறான கருத்துருவாக்கத்தை ஏற்ப்படுத்த இந்து முன்னணி மற்றும் தினமலர் நாளிதளின் கூட்டு சதியாகவே இதை பார்க்க முடிகிறது. 4வது கட்ட பேச்சுவார்த்தை குறித்து அறிவிக்கப்பட்ட நாள் முதல் கலவரத்தை உண்டாக்கும் நோக்கோடு தினமலர் செய்திகளை வெளியிட ஆரம்பித்தது. இந்து முன்னணிகாரர்களுடன் தினமலர் நிருபர்கள் கேமிரா சதவீதம் காத்திருந்தனர்.
முதலில் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியவர்கள் இந்து முன்னணி குண்டர்கள்தான். இருந்தாலும் தினமலர் அதையெல்லாம் படம் பிடிக்காமல் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் கற்களை தூக்கி வைத்து கொண்டிருக்கும் படத்தை செய்தியாக வெளியிட்டு தன் அரிப்பை தீர்த்து கொண்டது. அந்த பெண்கள் கன்னியாகுமரி இடிந்த கரையை சேர்ந்தவர்கள் என்பதை குறிப்பிட்டு. உதயகுமார் ஏன் இடிந்தகரை பெண்களை இந்த பேச்சு வார்த்தைக்கு அழைத்து வந்தார் என்று கேட்டிருகிறது.
ஏன் இடிந்தகரை பெண்களை கூட்டி வந்தால் என்ன தவறு. அது மட்டுமல்லாது அணுவுலை எதிர்ப்பு மக்கள் தலைவர் உதயகுமார் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கலவரத்தை உண்டாக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என்றும் இந்து முன்னணி தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆயுத பயிற்சி எடுத்து திட்டமிட்டு கலவரம் செய்வது இந்து முன்னணி இயக்கத்திற்கு வேண்டுமால் பழக்கமாக இருக்கலாம் அதற்காக மக்கள் போராட்டங்களை குறித்து அவதூறு பரப்ப தினமலருக்கும், இந்து முன்னணிக்கும் என்ன தகுதி இருக்கிறது. தமிழர்கள் அறிவார்கள் தினமலர் மற்றும் இந்து முன்னணியின் யோக்கிதை பற்றி.
இடிந்தகரை பெண்களை பார்த்து ஏன் தினமலரும், இந்து முன்னணியும் பயப்பட வேண்டும். உதயகுமார் நிறைய ஆண்களை கூட்டி வருவார் நாம் கலவரம் செய்து அவர்களை ஜெயிலில் தள்ளிவிட்டால் இந்த போராட்டத்தை வலுவிழக்க செய்யலாம் என்று எண்ணிய தினமலர், இந்து முன்னணியின் சதி திட்டத்தை இடிந்தகரை மீனவ குலத்து வீர மங்கைகள் முறியடித்தனர். வழக்கம்போல் காலதாமதமாக வந்த போலீசார், இரு தரப்பினரையும் பிரித்து அனுப்பினர். பின், இந்து முன்னணியினர், 10 பேரை கைது செய்தனர்.
கூடங்குளம் அணு மின்நிலையத்தை ஆதரிக்கும் யாராக இருந்தாலும் அவர்கள் மனிதகுல விரோதிகளே.
*மலர்விழி*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக