வியாழன், பிப்ரவரி 16, 2012

எஸ்.டி.பி.ஐ பேரணியில் போலீஸ் அராஜகம் – தடியடி, கைது

திருவனந்தபுரம்:சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்திய தேசத்துரோக வழக்கை வாபஸ்பெறக் கோரி எஸ்.டி.பி.ஐ நடத்திய தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணியில் போலீஸ் அராஜகம். எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தடியடியில் ஏராளமான உறுப்பினர்களுக்கும், போலீசாருக்கும் காயமேற்பட்டது. இன்று காலை 12.20 மணியளவில் இச்சம்பவம்
நடந்துள்ளது.
sdpi march police lathicharg​eகேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் இருந்து பேரணி துவங்கியது. துவக்க உரைக்கு பின்னர் சிறிய அளவில் போலீசாருக்கும், எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் இடையே தள்ளு. முள்ளு நிகழ்ந்தது. இதனைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாத சூழலில் போலீசார் திடீரென தடியடி நடத்த துவங்கினர். பின்னர் தண்ணீரை பீச்சி, கண்ணீர் புகையை பிரயோகித்தனர். பேரணியில் இருந்து கலைந்து சென்ற எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்களை தேடிப்பிடித்து தாக்கிய போலீசார் அவர்களை கைது செய்தனர்.

1 கருத்து:

  1. sirupanmaiyinarum muslimkalum valimaiadaivadhu indiyavil desa throgam,india iraiyanmaikku ethiranathu athanal sdpi udane intha maha pathagathai kaivida vendum illai yendral ithupondra sampavangal thodarum

    பதிலளிநீக்கு