லக்னோ: ஆர்.எஸ்.எஸ்-ன் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் முஸ்லிம்கள் இந்திய தேசத்தின் மீதான தங்களது விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை இமாம்பாரா என்னும் இடத்தில் சில முஸ்லிம் மொளலவிகள் நடத்திய் மீலாது விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.
முஹம்மது நபியும் ஒருவர் தன்னுடைய தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார். தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருக்க வேண்டிய தனித்துவமிக்க அம்சமாகும். எல்லா முஸ்லிம்களும் தங்களது நபி கூறியபடி நடப்பார்கள் என்று நம்புகிறேன் இவ்வாறு மொபைல் போனின் மூலம் பேசியுள்ளார்.
காவி பயங்கரவாதிகள் நிகழ்த்திய பல தீவிரவாத தாக்குதல்களில் இந்திரெஷ் குமாரின் பெயரும் சேக்கப்பட்ட நிலையில் இருக்க முஸ்லிம்கள் தேசத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. பல தீவிரவாத தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவித்த எத்தனையோ சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் இன்றும் சிறைச்சாலையில் இருக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்-ன் முஸ்லிம்களுக்கான அமைப்பு ராஷ்டிரிய முஸ்லிம் மஞ்ச் (ஆர்.எம்.எம்) இந்த மீலாது விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்திரேஷ் குமார் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தாராம். விமானத்தை தவற விட்டதால் நிகழ்ச்சியில் பங்கெடுக்க முடியாமல் போக தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரை நிகழ்த்தியுள்ளார்.
இந்திய நாட்டில் கலாச்சாரத்தை பெருமைப்படுத்தி பேசிவிட்டு நமது தாய் நாடு இந்தியாவாக இருப்பதற்கு நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் என்றும், நாம் அனைவரும் அமைதியாக வாழவேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும் முஸ்லிம் சமூகம் தங்களது குழந்தைகளின் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும். கல்வியால் மட்டுமே முஸ்லிம் சமூகம் முன்னேர முடியும். எனவே கல்விக்கான போராட்டத்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார். இளைஞர்கள் கல்வி கற்றுக்கொள்ள அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கலந்து கொள்வார் என்ற செய்தி தெரிந்தவுடன் மற்ற முஸ்லிம் தலைவர்கள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தனர். ஆல் இந்தியா முஸ்லிம் பர்சனல் லா போர்டின் துணைத்தலைவர் டாக்டர் கல்பே சாதிக்கும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றிருக்க அவரும் இதனை புறக்கணித்தார்.
இன்னும் எத்தனையோ மார்க்க அறிஞர்கள் கலந்து கொள்வோம் என்று கூறியிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களது வேலை பழுவினால் வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்கள் அனைவரும் எங்களோடு கைகோர்த்துள்ளனர் என்று கூறினார் நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் மெளலானா துராஜ் ஜெய்தி. இந்த மெளாலானா துராஜ் ஜெய்தி என்பவர் பா.ஜ.கவுடனும் ஆர்.எஸ்.எஸ்வுடனும் நெருங்கிய தொடர்புடையவர். லக்னோவில் போட்டியிடுகின்ற பா.ஜ.க வேட்பாளரை ஆதரித்து ஆர்.எஸ்.எஸ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் இந்த மெளலானா கலந்து கொண்டுள்ளார்.
ஆல் இந்தியா ஷியா பர்சனல் லா போர்டின் ஊடக தொடர்பாளர் மெளலானா யசூப் அப்பாஸ் என்பவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் மேலும் கூறும் போது நிறைய முஸ்லிம் அறிஞர்கள் வருகின்ற தேர்தலில் பா.ஜ.கவிற்கு ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்ததாக கூறினார். இது போன்ற நிகழ்ச்சிகளை மாநிலம் முழுவதும் நடத்த இருப்பதாக தெரிவித்தார்.
(பசுத்தோல் போர்த்திய புலியாக செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ்-ன் சூழ்ச்சிகளுக்கு இப்படியும் முஸ்லிம்கள் பலியாகிறார்கள் என்பதுதான் கவலைக்குரிய விஷயம் - ஆசிரியர்)
ivar moulavi alla muslim ali iyakathin thalaivar.indiresh kumarkukku muslimkal meethu evvalavu patru che unmaiyile great.nichayamaga ivar solvathai anaithu muslimkalum ketpargal ena ethirparkiren,varungalangalil muslim manavargalukku scholarship kodukkum bjp ?
பதிலளிநீக்கு