புற்று நோய், ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டு வைக்காது. அறிவியல், ரசாயன மாற்றங்களால் ஏற்படும் கதிர்வீச்சு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் நிறை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் வளத்தில் முன்னணி நாடாக திகழும் ஜெர்மனியில் ஒரு கிராமமே புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கிராமத்தின் பெயர் வெவல்ஸ் பிளத். இதன் மக்கள் தொகை வெறும் 1500 பேர்தான். இங்கு வசிக்கும் மக்கள் அடிக்கடி பல்வேறு பாதிப்புக்கு உள்ளானார்கள். இதையடுத்து லுபெக் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது.www.asiananban.blogspot.com
இதில் அங்கு வசிக்கும் பெரும்பாலானவர்களுக்கு புற்று நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரத்தம் மற்றும் திசு மாதிரிகள் எடுத்து சோதனை நடத்தப்பட்டதில் வீட்டுக்கு ஒருவருக்கு புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. மார்பகம், நுரையீரல், வயிறு, கல்லீரல் ஆகியவற்றை புற்று நோய் தாக்கியுள்ளது. ஆனால் கிராம மக்கள் தங்களை கொடிய புற்று நோய் தாக்கி இருப்பதைகூட தெரிந்து கொள்ளாமல் இவ்வளவு காலம் வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
ஆய்வில் வெளியான தகவலை தொடர்ந்து அங்கு சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக