சனி, பிப்ரவரி 11, 2012

ஊழலுக்கு புரோக்கர் வேலை செய்யும் சோ !

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஆச்சார்யார். இவரை கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சி நியமித்தது. 

இந்த நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து 08.02.2012 அன்று ராஜினாமா செய்தார். இது குறித்துஅவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ’’ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது.

அதாவது இவருக்கு அரசின் தலைமை வழக்கறிஞ்சர் பதவியை லஞ்சமாக கொடுத்து விட்டு அதற்க்கு பதிலாக ஜெயாவின் சொத்து குவிப்பு வழக்கின் சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி பாரதிய ஜனதாகட்சி நெருக்கடி கொடுத்துள்ளது. நேர்மையான ஆச்சாரியார் தனக்கு கொடுக்கப்பட்ட அரசின் தலைமை வழக்கறிஞசர் என்ற மணி மகுடம் தேவையில்லை என்று தூக்கி எரிந்து விட்டார்.

முதல்வர் ஜெயாவிற்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கறிஞசர் என்கிற பதவியே போதும் என்றும் அந்த வழக்கை நேர்மையாக செய்தது முடிப்பேன் என்றும் சூளுரைத்துள்ளார். நாட்டு மக்களின் பணத்தை கொள்ளையடித்து சொத்து குவித்த ஜெயா மற்றும் அவரது கூட்டம் இப்போது முழி பிதுங்கி நிற்கிறது. இந்த கேவலமான காரியத்திற்கு ஜெயாவுக்கும் BJPக்கும் இடையில் தூது போன புரோக்கர் யார் தெரியுமா? அவர்தான் நமது திருவாளர் துக்ளக் சோ. இவர் தன்னை மிஸ்டர் கிளீன் என்று சொல்லிக்கொண்டு இதுபோல் புரோக்கர் வேலை செய்து வருகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக