காஸ்ஸா:ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் செயல்பட்ட ஒரேயொரு மின்சார நிலையமும் எரிபொருள் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது. காஸ்ஸாவில் 40 சதவீத மின்சாரத்தையும் அளிப்பது இந்த மின் நிலையம் ஆகும் எரிபொருள் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி தங்களை இருட்டில் ஆழ்த்தும் என்று காஸ்ஸா மக்கள் பீதியடைந்துள்ளனர். மின்சார
தடை தீவிரமடையும் என்று காஸ்ஸா மின்சார நிலையம் அறிவித்துள்ளது.
எகிப்தில் இருந்து காஸ்ஸாவுக்கு மின்சாரத்திற்கான எரிபொருள் வந்து கொண்டிருந்தது. எகிப்தில் ஏற்பட்டுள்ள புதிய அரசியல் நெருக்கடி எரிபொருள் வரத்திற்கு தடையாக மாறியுள்ளது. ஜெனரேட்டர்கள் மூலமாக தற்போது காஸ்ஸாவில் வீடுகளிலும், வர்த்தக நிறுவனங்களிலும் விளக்குகள் எரிகின்றன. ஆனால், வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமாகும். பெட்ரோல் பம்புகளுக்கு முன்பாக நீண்ட க்யூ வரிசை காணப்படுகிறது. எகிப்து அரசிடம் கூடுதல் எரிபொருள் அளிக்குமாறு காஸ்ஸா அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக