கூடங்குளம் போராட்டக்குழுவினர் மீதான தாக்குதலுக்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வைகோ வெளியிட்ட அறிக்கையில், "சுற்றுச்சூழலுக்கும், மக்கள் உயிருக்கும் பேரபாயம் விளைவிக்கக்கூடிய கூடங்குளம் அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது என்று, 100 நாள்களுக்கும் மேலாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கூடங்குளத்திலும், கடற்கரையோர கிராமங்களிலும் வாழுகின்ற இலட்சக்கணக்கான மக்களின் அச்சத்தையும், கவலையையும் கருதி, அணுமின் நிலையம் தொடங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்து இருந்தது.
இந்தப் பிரச்னை குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அறிவித்த குழுவினரோடு, மாநில அரசும் ஒரு குழுவை அறிவித்தது. அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில், புஷ்பராயன் அவர்களும், மை.பா. ஜேசுராஜ் அவர்களும் இடம் பெற்று உள்ளனர்.
நான்காவது சுற்றுப் பேச்சுகளுக்காக, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்பாடு செய்து இருந்த கூட்டத்தில் பங்கு ஏற்க இருவரும் சென்றனர். அவர்களுடன், உதயகுமார் அவர்களும், கடற்கரையோரத்துத் தாய்மார்களும் சென்று இருந்தனர். அங்கே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலரும், மத உணர்வைத் தூண்டிவிட்டு அராஜகம் செய்ய முனையும் சிலரும், அவர்களைக் கடுமையாகத் தாக்கி உள்ளனர்.
ஜனநாயக உரிமைகளின்படிப் போராடி வருகின்ற அணுமின் நிலைய எதிர்ப்பு இயக்கத்தினரைக் கொலை செய்யும் நோக்கத்தோடு வன்முறைத் தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீதிக்காகப் போராடும் மக்கள் மீது களங்கம் சுமத்தியும், குறிப்பாக மதரீதியான வெறுப்பு உணர்ச்சியை ஏற்படுத்தும் நச்சுப் பிரச்சாரம் செய்தும், அதற்கும் மேலாக வன்முறையில் ஈடுபட்டும் போராட்டத்தை நசுக்க, மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் திட்டமிட்டுச் செயல்படுகிறது.
போராட்டக்குழுவினர் மீது நடத்தப்பட்டு உள்ள தாக்குதலால், கடற்கரையோர கிராமப்புற மக்கள் வேதனையும், பதற்றமும் அடைந்து உள்ளனர்.
அணு உலைக்கு எதிரான போராட்டத்தையோ, ஜனநாயக உரிமைகளையோ, அடக்குமுறை, வன்முறைகளின் மூலமாக ஒருபோதும் ஒடுக்கி விட முடியாது. முன்னிலும் பன்மடங்கு ஆவேசத்துடன் போராட்டம் வீறுகொண்டு எழும் என எச்சரிக்கிறேன்," என்று வைகோ கூறியுள்ளார்.
ராமதாஸ் கண்டனம்:
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசின் நிபுணர் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வரும் தங்கள் மீது இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போராட்டக் குழுவினர் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அதையும் மீறி இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. விசாரணை நடத்தி தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்கும் பிரச்சினை குறித்து மத்திய அரசு நிபுணர்களும், மாநில அரசு பிரதிநிதிகளும் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருந்தனர். மாநில அரசு பிரநிதிகள் குழுவில் உள்ள கூடங்குளம் போராட்டக் குழுவினர், பேச்சுவார்த்தைக்கு வரும் போது இந்து முன்னணி அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கதாகும்.
மேலும் இந்த தாக்குதலை மத மோதலாக மாற்ற சில அமைப்புகள் முனைந்துள்ளன. இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை சீராக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்," என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
கொளத்தூர் மணி கண்டனம்...
பெரியார் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கையில், "கூடங்குளம் அணு உலை தொடர்பாக நான்காம் கட்டப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க வந்த போராட்டக் குழுவின் பிரதிநிதிகள் மீது காங்கிரஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தாக்குதுல் நடத்தியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த தாக்குதலின் நோக்கம் வெறும் தாக்குதலாக மட்டும் இருக்காது. தாக்கப்பட்ட மக்கள் தாக்கியவர்கள் மீது எதிர்வினை ஆற்றுவார்கள். அதன்பிறகு வன்முறையைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் காவல்துறையை வைத்து அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்களை முடக்கி விடலாம் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்ட முயற்சி என்றே கருத வேண்டியுள்ளது.
அறவழியில் போராடும் மக்களுக்கும், அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்," என்று கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக