அணுஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறி, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் உள்பட பல நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இதற்கிடையில் டெல்லியில் இஸ்ரேல் தூதரக கார் மீது தாக்குதல் நடந்தது.
மறுநாளே தாய்லாந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இந்த
2 தாக்குதலுக்கும் காரணம் ஈரான்தான் என்று இஸ்ரேல் புகார் கூறிவருகிறது. தீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தாவிட்டால், ஈரான் மீது போர் தொடுப்போம் என்று இஸ்ரேல் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.
இந்நிலையில், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம், பொறுமையாக இருங்கள் என்று இஸ்ரேல் அதிபர், பிரதமரை ஜப்பான் பிரதமர் நோடா கேட்டுக் கொண்டுள்ளார்.
ஐந்து நாள் பயணமாக ஜப்பான் வந்துள்ள இஸ்ரேல் ராணுவ அமைச்சர் ஹெ§த் பராக்கிடம், நோடோ இதை வலியுறுத்தினார். ஈரான் மீது தாக்குதல் நடத்தினால், பயங்கர பின்விளைவுகள் ஏற்படும்.
இப்போதுள்ள பிரச்னையும் பூதாகரமாகி விடும். எனவே பொறுமையாக இருங்கள். ராணுவ நடவடிக்கை வேண்டாம்Õ என்று பராக்கிடம் நோடா கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக