சங்கரன் கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் மார்ச் 18ம் திகதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த தமிழக சட்ட சபை தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு, சங்கரன் கோவில் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த கருப்பசாமி, திடீர் மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
அதிமுக சார்பில் முத்துச்செல்வி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பாமக உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தேர்தல் திகதி அறிவிக்கபப்ட்ட பின்னர் தனது வேட்பாளரை அறிவிப்பதாக திமுக தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இடைத்தேர்தல் மார்ச் 18ம் திகதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் இன்று அறிவித்துள்ளார். எதிர்வரும் 22ம் திகதி மனுத்தாக்கல் தொடங்கப்பட்டு, 29 திகதி முடிவடைகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக