உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட யுரேனிய அணு எரிபொருள் உருளையை, தெஹரான் அணு ஆய்வு உலையில் பயன்படுத்தியுள்ளதாக ஈரானின் அணு சக்தி ஆராய்ச்சி அமைப்பு ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டுள்ளது. ஈரானில் அணு ஆயுதத்தை தயாரிக்க முயற்சி
நடப்பதாக மேற்கு நாடுகள் கூறி வருகின்றன. இதை ஈரான் மறுத்துள்ளது.
எனினும், ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ளது. அமெரிக்கா சார்பில் புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சட்டத்தில் ஒபாமா சனிக்கிழமை கையெழுத்திட்டார். இந்த நிலையில், ஈரான் அணுசக்தி அமைப்பின் இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான தகவல்:
யுரேனிய தாதுப் பொருளை அடிப்படையாகக் கொண்டு அணு எரிபொருள் உருளையை நாங்கள் தயாரித்துள்ளோம்.
அதை வெற்றிகரமாக அணு ஆய்வு உலையில் பொருத்தி, கண்காணித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலால், மேற்கு நாடுகள் கவலையடைந்துள்ளன.
மருத்துவப் பயன்பாட்டுக்காக அணு ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ___

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக