கடாபியின் இராணுவத்தில் கேர்ணலாகப் பதவி வகித்த ஒருவர் தற்போதைய லிபிய இராணுவ வீரர்களின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி தகவலை அந்நாட்டின் இடைக்கால மாற்றுக்காலத் தேசிய சபை அறிவித்துள்ளது. கடாபி அரசாங்கத்தின்
இராணுவத்தில் பணியாற்றி பின்னர் பதவி விலகிய யூசெப் அல் மன்குஸ் என்பவரே இப்பதவியைப் பெற்றவராவார்.
இவர் பதவி விலகிய பின்னர் கடாபிக்கெதிரான போராட்டத்திலும் பங்குபற்றியிருந்தார்.
இப்பதவியினை இதற்கு முன்னர் ஜெனரல் படா யூனிஸ் வகித்து வந்தார்.
எனினும் கடந்த ஜூலைமாதம் அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் இப்பதவிக்கு ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது யூசெப் அல் மன்குஸ் பிரதிப் பாதுகாப்பு அமைச்சராகவும் உள்ளார்.
இவர் அங்கு நடைபெற்ற மோதல்களின் போது கடாபி படைகளால் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டதுடன் பின்னர் ஆகஸ்ட் மாதம் திரிபோலி வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட்டார். ___

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக