பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர். முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.
வெள்ளி, செப்டம்பர் 20, 2013
செவ்வாய், செப்டம்பர் 17, 2013
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் அமித் குமார்!
ஹங்கேரி நாட்டின் தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார் உள்பட 22 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
அமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு !!!
நேற்று 16.9.2013 அமெரிக்க நேரப்படி காலை சுமார் 8.20 மணிக்கு தலைநகர் வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கடற்படை தலைமையகக் கட்டிடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர், 8 பேர் காயமடைந்தனர். அலெக்சிஸ் ஆரோன் என்ற இளைஞர் 5 ஆண்டுகளாக கடற் படையில் மூன்றாம் கிரேடு, கடைநிலை ஊழியராக பணி புரிந்து, 2011-ல் விடுவிக்கப்பட்டார். அவர் இப்போது அமெரிக்க கடற்படையின் கணினி அமைப்பை பராமரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள எச்பி (ஹியூலெட் பாக்கார்ட்) நிறுவனத்தின் உப ஒப்பந்ததாரர் “தி எக்ஸ்பர்ட்ஸ்” நிறுவனத்தில் வேலை செய்கிறார். கடற்படையால் ஒப்புதல் அளிக்கப்பட்ட அனுமதி அட்டை அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. கடற்படை
சனி, செப்டம்பர் 14, 2013
சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர்!
தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும்
எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமும்
நிறைவாக அக்டோபர் 6 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் சிறைநிரப்பு போராட்டத்தையும்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.
வளைகுடாவுக்கு அடுத்த உலகின் மாபெரும் எண்ணெய் கிணறு..
வளைகுடா நாடுகளுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் படுகையில் கச்சா எண்ணெய் உற்பத்தி கடந்த திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. இந்த எண்ணெய் படுகை சோவியத் யூனியனில் இருந்து தனி நாடான கஜாகிஸ்தானின் அருகே கேஸ்பியன் கடலில் உள்ளது. கஸாகான் ஆயில் பீல்ட் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் பகுதியில் 13 பில்லியன் பேரல்கள் அளவுக்கு கச்சா எண்ணெய் இருப்பதாகத் தெரிகிறது.
திருக்குர்ஆனுக்கு தீ வைக்க முயன்ற கிறிஸ்தவ பாதிரியார் கைது!
ஃப்ளோரிடா: முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆனை தீ வைத்துக் கொளுத்த முயன்ற அமெரிக்க பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்கப்பட்டதன் நினைவு தினத்தையொட்டி மூவாயிரம் திருக்குர்ஆன் பிரதிகளை தீவைத்துக் கொளுத்த முயன்ற சச்சைக்குரிய அமெரிக்க கிறிஸ்தவ பாதிரியார் டெர்ரி ஜோன்ஸை ஃப்ளோரிடா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வெள்ளி, செப்டம்பர் 13, 2013
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு!
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வன்முறை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கி டெல்லி விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 16 ம் தேதி டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர், ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்து, வீசி எறியப்பட்டு, உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கி, வெட்கி தலைகுனியவும் வைத்தது.
சீனாவில் 8 மாத குழந்தையின் ஆணுறுப்பை கடித்து குதறிய குரங்கு! (வீடியோ இணைப்பு)
சீனாவில் தேசிய விலங்கியல் பூங்காவில் தாயுடன் சுற்றிப் பார்க்க சென்ற 8 மாத குழந்தையின் ஆண் உறுப்பை குரங்கு ஒன்று கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.cசீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கையாங் மாகாணத்தில் கியான்லிங் தேசிய வன விலங்கியல் பூங்கா உள்ளது. தினமும் இதனை சுற்றிப் பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வர்.
உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதி!- அதிர்ச்சி தகவல்
மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாவதால் உலகில் தினமும் 87 கோடி மக்கள் பட்டினியால் அவதிப்படுகின்றனர். ஐ.நா.சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் சார்பில் சர்வதேச அளவில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் உலக அளவில் உற்பத்தியாகும் உணவு பொருட்கள் பெருமளவில் வீணாக்கப்படுவது தெரிய வந்தது.
200 பேருக்கு மரண தண்டனை! -பகிரங்க மன்னிப்பு கோரும் நெதர்லாந்து!
இந்தோனேசியாவில் தமது துருப்பினரால் இழைக்கப்பட்ட மரண தண்டனைகளுக்கு நெதர்லாந்து பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது. 1945 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தில் இந்தோனேசியாவைச் சேர்ந்த 200 பேர் தூக்கிலிடப்பட்டனர். அத்துடன் நெதர்லாந்து துருப்பினரால் சுமார் 150 பேர் கொல்லப்பட்டனர்.
ஜாட் சாதி வெறியர்களோடு சங்க பரிவாரம் நடத்தும் முசாஃபர் நகர் கலவரம் !
முசாஃபர் நகர் மாவட்டம் உத்திர பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ளது. அங்கு முசுலீம்களுக்கெதிராக இந்து-ஜாட் சாதியினர் கடந்த 7-ம் தேதி முதல் நடத்தும் கலவரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40-ஐ தாண்டி விட்டது. தற்போது தமது கிராமங்களில் இருந்து உயிர் பிழைக்க தப்பி ஓடிவரும் முசுலீம்களை நோக்கி இந்துமத வெறியர்கள் தம் தாக்குதலை துவக்கி உள்ளதால் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. சாம்லி பகுதியில் மசூதியின் இமாம் மௌலானா உமர் தின்-ஐ கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொன்றுள்ளனர்.
கலவரத்தில் காயமடைந்தவர்கள்.
இந்துமத வெறியர்களை ஒரேயடியாக பகைத்துக் கொள்ள மாநில அரசு விரும்பவில்லை. தேர்தலில் முசுலீம்கள் வாக்குகளோடு இந்துக்கள் வாக்கும் சமாஜ்வாதிக்கு வேண்டும் என்பதால் ஆகஸ்டு 27 முதல் செப்டம்பர் 9 வரை நடந்த சம்பவங்களை விசாரிக்க ஓய்வுபெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையில் கமிசன் ஒன்றை அகிலேஷ் யாதவ் அமைத்துள்ளார்.
திங்கள், ஆகஸ்ட் 26, 2013
மியான்மரில் மீண்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது தாக்குதல்!
மியான்மரில் மீண்டும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீதும், அவர்களின் வீடுகள், கடைகள் மீதும் புத்த வன்முறைக் குழுக்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த ஓராண்டாக நடந்துவரும் இனக்கலவரத்தில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். சுமார் 1 1/2 லட்சம் பேர் வசிப்பிடங்களை விட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர்.
சனி, ஆகஸ்ட் 24, 2013
வெள்ளி, ஆகஸ்ட் 23, 2013
சிரியாவில் இரசாயன தாக்குதலில் 1300 பேர் பலி: ஐ.நா விசாரணை!
டமாஸ்கஸ்: அரசுக்கு எதிரான புரட்சிப் படையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதியில் ரசாயன ஆயுதத் தாக்குதலை அரசு ஆதரவுப் படையினர் நடத்தவில்லை. அந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்று சிரியா அரசு மறுத்துள்ளது. எனினும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் ரசாயன ஆயுதம் பயன்படுத்தப்பட்டதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஐநா வல்லுநர் குழுவை அனுப்பி வைக்க அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
கொடைக்கானல் மலையில் ஆதிவாசிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவல்!
கொடைக்கானல் மலையில் ஆதிவாசிகள் போல் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலையொட்டி தேடும் பணி தீவிரம் அடைந்து உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வடகவுஞ்சி, பெரும்பள்ளம் இடையே பொய்யாவழி வனப்பகுதியில் கடந்த 19.4.2008– ம் ஆண்டு தீவிரவாதிகள் ஆயுத பயிற்சி மேற்கொள்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.
வியாழன், ஆகஸ்ட் 22, 2013
ஃபேஸ்புக் நிர்வாகத்தையே அலறவைத்த பலஸ்தீனியருக்கு பரிசளிக்க முடிவு!
உலகின் முன்னணி சமூக வலைத்தளமாக ஃபேஸ்புக் விளங்குகிறது. இதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் என்பவரிடம் தொடர்பு கொண்ட பலஸ்தீனியரான கலீல் ஷ்ரியதெ என்பவர் ஃபேஸ்புக்கின் பாதுகாப்பு அம்சத்திலுள்ள குறையொன்றைச் சுட்டிக் காட்டுகிறார். ஆனால், கலீலின் வேண்டுகோளுக்கு எவ்வித மறுமொழியும் ஃபேஸ்புக் நிறுவனம் அளிக்கவில்லை.
எகிப்து இராணுவத்தை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!
மதுரை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு,தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.
தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி மீது புதுவை அரசே உடனே நடவடிக்கை எடு! : பாப்புலர் ஃப்ரண்ட்
சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து "ஃப்ரீடம் மீட்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.
புதன், ஆகஸ்ட் 21, 2013
திங்கள், ஆகஸ்ட் 19, 2013
தேசியகொடிக்கு அவமதிப்பு: ஹஸாரே மீது வழக்கு!
ஜான்பூர்: தேசியக்கொடியை அவமதித்ததாக அன்னா ஹஸாரே மீது வழக்குப் பதிவுச் செய்ய ஜான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக்பால் மசோதாவுக்காக உண்ணாவிரதம் நடத்தி பிரசித்திப் பெற்ற அன்னா ஹஸாரே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் ஜனதந்திர யாத்திரை நடத்தினார். கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி அவர் ஜான்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக வழக்குரைஞர் ஹிமான்சு ஸ்ரீவஸ்தவா என்பவர் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வியாழன், ஆகஸ்ட் 08, 2013
மலேசியாவில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஈகை திருநாள்!
மலேசியா: மலேசியாவில் இன்று (08/08/13) ஈகை திருநாள் கொண்டாடப்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலும்பூர் மஸ்ஜித் இந்தியா பள்ளிவாசலில் காலை சரியாக 9 மணிக்கு தொழுகை நடத்தப்பட்டது. இதில் மலேசியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனேசியா, பர்மா, சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அரேபிய நாட்டை சேர்ந்த பல்லாயிரகணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பினை பரிமாறிக்கொண்டனர்.
வெள்ளி, ஆகஸ்ட் 02, 2013
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதார தடை!
அணு உலை பிரச்சினை காரணமாக ஈரான் நாட்டுக்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. இதன்படி ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா, சீனா உள்பட 8 நாடுகள் குறைத்து வருகின்றன. சமீபத்தில் ஈரானில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஹாசன் ரவுஹானி வெற்றி பெற்றார். அவர் வருகிற ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்க இருக்கிறார்.
பழங்குடியின பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ் காரர்கள்! -அதிர்ச்சி தகவல்!
புதுடெல்லி: ஆர்.எஸ்.எஸ்காரர்கள் பழங்குடியின பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்வதாக மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் காந்திலால் துரியா குற்றம் சாட்டியுள்ளார். மத்திய பிரதேசத்தில் தலித் கிராமங்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதிகமாக இளம்பெண்களை கடத்திச் செல்வதாக முன்னாள் மத்திய அமைச்சரும், பழங்குடியின தலைவருமான துரியா கூறுகிறார்.
தெலுங்கானா உருவாக்கம்: பா.ஜ.கவுக்கு சாதகம்! முஸ்லிம்களுக்கு பாதகம்! -அஸாஸுத்தீன் உவைஸி!
ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலத்தை பிரித்து தெலுங்கானா புதிய மாநிலம் உருவாக்கியது பா.ஜ.கவுக்கு மட்டுமே சாதகமாக அமையும் என்றும், புதிய மாநிலம் முஸ்லிம்களின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மஜ்லிஸே இத்திஹாதுல் முஸ்லிமீனின் (எம்.ஐ.எம்) தலைவரும் ஹைதராபாத் எம்.பியுமான அஸாஸுத்தீன் உவைஸி கூறியுள்ளார்.
வியாழன், ஆகஸ்ட் 01, 2013
திமுக பிரமுகர் கொலையில் எட்டுப்பேர் கைது!
திமுக பிரமுகர் இடிமுரசு இளங்கோ என்பவர் இரு நாள்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட வழக்கில், எட்டுப் பேரை காவல்துறை கைது செய்துள்ளது. சென்னை வியாசர்பாடி பக்தவச்சலம் காலனி முதல் தெருவைச் சேர்ந்தவர் க. இடிமுரசு இளங்கோ (45). திமுகவில் 45-ஆவது வட்டச் செயலராக இருந்த இளங்கோ கட்டட ஒப்பந்தப் பணியையும் செய்து வந்தார்.
மாலேகான் குண்டுவெடிப்பு: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி அஸிமானந்தாவை விடுவித்த என்.ஐ.ஏ!
புதுடெல்லி: மாலேகான் உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் செயல்பட்டுள்ளதை வெளிப்படுத்திய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சுவாமி அஸிமானந்தாவை குற்றப்பத்திரத்தில் இருந்து விடுவித்துள்ளது தேசிய புலனாய்வு ஏஜன்சி. மாலேகான் குண்டுவெடிப்பில் அஸிமானந்தாவுக்கு பங்கில்லை என்று என்.ஐ.ஏ கருதுகிறது. குண்டுவெடிப்பு நிகழ்ந்த பிறகே அஸிமானந்தாவுக்கு தெரியவந்தது என்று என்.ஐ.ஏ கூறுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









.jpg)

































