ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுதீன் ஹஸன் சிஸ்தி தர்காவில் கடந்த 2007ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு முந்தைய நாள், சுரேஷ் நாயர், மெகுல் மற்றும் பவேஷ் பட்டேல் ஆகியோர் கோத்ராவில் இருந்த சுனில் ஜோஷி என்ற ஆர்.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பின் பிரச்சாரகரிடம் இருந்து வெடிகுண்டினை பெற்றுக்கொண்டு பரோடா சென்று, பின்னர் தனியார் பஸ் மூலம் அஜ்மீர் சென்றடைந்தனர்.
அஜ்மீரில் பயங்கரவாதி ஹர்ஷத் சோலங்கி மற்றும் முகேஷ் வாசானி ஆகியோரிடம் இந்த 3 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டை ஒப்படைக்க, அந்த குண்டினை தர்காவிற்குள் வெடிக்கச் செய்துள்ளனர் என்ற விபரம் போலீசாருக்கு தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு போலீசார் 2 குற்றப்பத்திரிகைகளை அஜ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
பயங்கரவாதிகள் ஹர்ஷத் சோலாங்கி, முகேஷ் வாசானி, சுரேஷ் நாயர், மெகுல், பவேஷ் பட்டேல் மற்றும் இந்த குண்டு வைப்பு முயற்சி தோல்வியடைந்தால் பின்பலமாக இருந்து குண்டை வெடிக்க வைக்க தயாராக இருந்த மேலும் இருவர் மீது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவர்களில் பயங்கரவாதி சுனில் ஜோஷி கோத்ராவில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டான்.
இரண்டாவது குற்றப்பத்திரிகையில் பயங்கரவாதி சுவாமி அசீமானந்த், சந்தீப் டாங்கே, பவேஷ் பட்டேல், மெகுல், சுரேஷ் பாய், ராமச்சந்திரா கல்சங்ரா, பாரத் பாய் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
இது தவிர, ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்பு போலீசார், பயங்கரவாதி தேவேந்திர குப்தா, லோகேஷ் ஷர்மா, சந்திரசேகர் லெவே ஆகியோர் மீது அஜ்மீர் மாவட்ட நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இவர்களில் பயங்கரவாதி சுவாமி அசீமானந்தா அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நீண்ட காலமாக துப்பு துலங்காமல் இருந்த 2006ம் ஆண்டில் நிகழ்ந்த மலேகான் குண்டு வெடிப்பு, ஐதராபாத் மக்கா மசூதி குண்டு வெடிப்பு தொடர்பான வழக்குகளின் விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
குற்றவாளிகளில் ஒருவரான குஜராத் மாநிலம் பரூச் பகுதியை சேர்ந்த பயங்கரவாதி பவேஷ் பட்டேல் என்பவனை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து தேசிய புலனாய்வு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். அவனைப் பற்றிய தகவல் அளிப்பர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்குவதாகவும் அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் பயங்கரவாதி பவேஷ் பட்டேலை தேசிய புலனாய்வு போலீசார் நேற்று கைது செய்தனர்.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக