புதன், பிப்ரவரி 01, 2012

இஸ்மாயில் ஹனிய்யா ஈரான், வளைகுடா நாடுகளில் சுற்றுப்பயணம்

காஸ்ஸா:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட இயக்கமான ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்ஸாவின் பிரதமர் இஸ்மாயில் ஹானிய்யா ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஹமாஸின் மூத்த தலைவர் காலித் மிஷ்அல் ஜோர்டான் மன்னர் மற்றும் கத்தர் இளவரசரை ஏற்கனவே சந்தித்து இருந்தார். ஹானிய்யா ஈரான், குவைத், பஹ்ரைன், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளுக்கு
சுற்றுப்பயணம் செய்கிறார். ஈரான் அதிபர் அஹ்மத் நஜாதின் சிறப்பு அழைப்பின் பேரில் ஹனிய்யா ஈரானுக்கு செல்கிறார் என ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
நேற்று முன் தினம் காலித் மிஷ்அல் ஜோர்டானுக்கு சென்று மன்னர் அப்துல்லாஹ் மற்றும் கத்தர் இளவரசர் ஷேக் தமீம் இப்னு ஹமத் அல் தானி ஆகியோருடன் சந்திப்பை நடத்தியிருந்தார்.
இதற்கிடையே, காலித் மிஷ்அல் துருக்கி செல்ல உள்ளார் என்ற செய்தியை அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அரபு நாடுகளில் அரசுக்கெதிரான போராட்டங்கள் நடந்துவரும் சூழலில் தூதரக பேச்சுவார்த்தைக்கான ஹமாஸ் தலைவர்களின் சுற்றுப்பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக