ஜாமீனில் வெளிவந்த ஹிந்து வாஹினி பயங்கரவாதிகள் |
ஹைதரபாத்: கடந்த நவம்பர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் ஹிந்து வாஹினி அமைப்பினரைச்சேர்ந்த 6 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டு 90 நாட்களாகியும் காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்பிக்காததால் அவர்கள் அனைவரும் நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தால்
ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு ஹிந்து வாஹினி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கொலை முயற்ச்சி பிரிவான இ.பி.கோ 307வது பிரிவின் படி கைது செய்யப்பட்டனர். அதன் பின்னர் இவ்வழக்கை சிறப்பு விசாரணைக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

நீதிபதியிடம் அனுமதி பெற்ற பின்னர் குற்றவாளிகள் அனைவரும் சிறைச்சாலையிலேயே அடையாளப்படுத்தப்பட்டனர். தற்போது சதானந்தா-27, சக்தி வினோத்-24, உன்னி கிருஷ்ணன்-23, பபா பாகராவ்-21, சந்தோஷ்-22, கல்யாண்-26 ஆகிய 6 நபர்களும் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.
செகந்தரபாத் அருகே ஒரு முஸ்லிம் ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் பல ஹிந்து வாஹினி அமைப்பினர் ஈடுபட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே நிபந்தனை ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் வெவ்வேறு சந்தர்பங்களில் 8 முஸ்லிம் இளைஞர்கள் ஹஜ்ஜுப் பெருநாளின் போது ஹிந்து வாஹினி அமைப்பினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர். ஹஜ்ஹுப் பெருநாளின் போது முஸ்லிம்கள் மாடுகளை அறுத்து குர்பானி கொடுப்பது வழக்கம். முஸ்லிம் இளைஞர்ள் அனைவரும் மாடுகளை அறுத்து குர்பானி கொடுத்ததால் ஆத்திரமடைந்த ஹிந்து வாஹினி கும்பல்கள் அவர்களின் மீது கடுமையான தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்த காவல்துறை வெகு சீக்கிரமே அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனையை பெற்றுத்தருவதாக கூறிவிட்டு, 3 மாதங்களாகியு குற்றப்பத்திரிக்கையை சமர்பிக்காததால் குற்றவாளிகள் அனைவரும் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர். இதன் மூலம் காவல்துறையின் பொடுபோக்குடன் நடந்து கொண்டதோடு ஹிந்து தீவிரவாதிகளுக்கு துணைபோவது தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக