புதன், பிப்ரவரி 01, 2012

ஒரிசாவில் பயங்கரம் : அமைச்சர் மண்டையை இரும்பு கம்பியால் உடைத்த வாலிபர் !

ஒரிசாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் அமைச்சரின் மண்டை உடைந்தது. இது தொடர்பாக பெண் வேடம் அணிந்து வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஒரிசா  மாநிலத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருப்பவர்
மகேஷ்வர் மொகந்தி. பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவர்.
இவர், மாநிலத்தில் நடக்க இருக்கும் பஞ்சாயத்து தேர்லுக்காக, நேற்று பூரி மாவட்டம் அலந்தியா கிராமத்தில் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசிக் கொண்டிருந்தபோது, மேடையின் பின்னால் இருந்து திடீரென வந்த பெண் போல் வேடமிட்ட வாலிபர், யாரும் எதிர்பாராத வகையில் இரும்புக் கம்பியால் அமைச்சர் தலையில் ஓங்கி அடித்தார்.
இதில், அமைச்சர் மகேஷ்வர் மொகந்தி நிலைகுலைந்தார். அவரது தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. உடனே அங்கிருந்தவர்கள் அமைச்சரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அமைச்சரை தாக்கிய வாலிபரை, தொண்டர்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், வாலிபரின் பெயர் பல்பாத்ரா போய் (30) என்பது தெரிந்தது. அரசியல் முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகேஷ்வர் மொகந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அமைச்சர் இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக