சனி, பிப்ரவரி 11, 2012

திருமண விருந்தில் பெண்களுடன் நடனம்: பீகார் எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு

JDU MLAபாட்னா:திருமண விருந்தில் மதுபானம் சப்ளை செய்யும் பெண்களுடன் நடனமாடியதாக ஐக்கிய ஜனதா தள சட்டப் பேரவை உறுப்பினர் ஷியாம் பகதூர் சிங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் பீகார் மாநிலம் சிஸ்வான் மாவட்டத்தில் உள்ள படாரியா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவராவார்.

பிப்ரவரி 8-ம் தேதி திருமண விருந்தில் பெண்களுடன் சேர்ந்து பகதூர் சிங் நடனமாடிய நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல் சூளை உரிமையாளர் அஜய் சிங் ஏற்பாடு செய்திருந்த கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்க கோபால்கஞ்ச் மாவட்டம் சென்ற அவர் அங்கிருந்து கடால்பூர் கிராமத்துக்குச் சென்று ஒரு திருமண விருந்தில் பங்கேற்றுள்ளார். திருமண விருந்தின்போது ஏற்பாடு செய்திருந்த கலாசார விருந்தில் அவர் மதுபானம் வழங்கும் பெண்களுடன் நடனம் ஆடிய காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இது குறித்து சிங்கிடம் தொடர்பு கொண்டு கருத்து கேட்டபோது, தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறிய அவர், பொதுவாக மக்கள் சந்தோஷத்தில் இருக்கும்போது உற்சாக மிகுதியில் நடனம் ஆடுவது வழக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெண்களுடன் நடனமாடும் நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து சிங்கிடம் விளக்கம் கோரியிருந்தது கட்சித் தலைமை. இப்போதும் இதேபோன்ற சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
ஏற்கனவே ஐக்கிய ஜனதாதளத்தின் கூட்டணி கட்சியான பா.ஜ.கவின் கர்நாடக மாநில அமைச்சர்கள் சட்டப்பேரவையில் வைத்தே பலான படங்களை மொபைல் ஃபோனில் பார்த்து மாட்டினார்கள். இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளத்தின் எம்.எல்.ஏ பெண்களுடன் சேர்ந்து உற்சாக நடனம் ஆடியுள்ளார்.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும், பா.ஜ.கவோடு சேர்ந்தால்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக