செவ்வாய், பிப்ரவரி 07, 2012

சங்கரன்கோவிலில் தேர்தல் பணியாற்ற 26 அமைச்சர்கள் ஒதுக்கீடு: ஜெ. அறிவிப்பு !

Jayalalithaசென்னை: சங்கரன்கோவில் தொகுதியில் இடைத் தேர்தல் பணியாற்ற 26 அமைச்சர்கள் உள்பட 34 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் சங்கரன்கோவில் நகரசபை தலைவர் என்ஜினியர் முத்துசெல்வி போட்டியிடுகிறார்
. எப்படியும் இத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக தேர்தல் பணிகளை தற்போதே துவங்கிவிட்டது. விரைவில் முதல்வர் சங்கரன்கோவிலில் பிரச்சாரம் செய்கிறார். அதற்காக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் குழு அங்கு சென்று ஆய்வு நடத்தியது. இந்நிலையில் 26 அமைச்சர்கள் உள்பட 34 பேர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

விரைவில் நடைபெற உள்ள சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

1. ஓ. பன்னீர்செல்வம், 2. செங்கோட்டையன், 3. நத்தம் விசுவநாதன், 4. கே.பி. முனுசாமி, 5. வைத்திலிங்கம், 6. பா. வளர்மதி, 7. சி.வி. சண்முகம், 8. தாமோதரன், 9. செல்லூர் ராஜூ, 10. பச்சைமால், 11. எடப்பாடி பழனிசாமி, 12. ஆர். காமராஜ், 13. எம்.சி. சம்பத், 14. கே.வி. ராமலிங்கம், 15. சின்னையா, 16. பி. தங்கமணி, 17. எஸ். சுந்தரராஜ், 18. செந்தூர்பாண்டியன், 19. கோகுல இந்திரா, 20. பி.வி. ரமணா, 21. ந. சுப்பிரமணியன், 22. வி. செந்தில்பாலாஜி, 23. என்.ஆர். சிவபதி, 24. ராஜேந்திர பாலாஜி, 25. செல்லப்பாண்டியன், 26. டாக்டர். விஜய், நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். முருகை யாபாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் பி.எச். பாண்டியன், அதிமுக தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி வ. ஜெயராமன் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் சின்னசாமி எம்.எல்.ஏ., அதிமுக மாணவர் அணிச்செயலாளர் எஸ். சரவணபெருமாள், அதிமுக சிறுபான்மையினர் நலப்பிரிவுச் செயலாளர் அன்வர்ராஜா, ஜெயலலிதா பேரவைச் செயலாளர் டி.ஆர். அன்பழகன், அதிமுக கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் ராஜலட்சுமி எம்.எல்.ஏ. ஆகிய 34 பேர் நியமிக்கப்படுகிறார்கள்.

கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி சிறப்பான முறையில் தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

6 பேர் மட்டும் சென்னையில்...

தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதாவைத் தவிர்த்து மொத்தம் 32 அமைச்சர்கள் உள்ளன. அவர்களில் 6 பேரை மட்டும் சென்னையில் வைத்துக் கொண்ட மற்ற 26 பேரையும் அவர் சங்கரன்கோவிலுக்கு அனுப்பி வைக்கவுள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக