தைவானில் தொடர்ந்து 23 மணி கம்ப்யூட்டர் கேம் ஆடிய வாலிபர் பரிதாபமாக இறந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தைவான் தலைநகர் தைபேயில் பல கம்ப்யூட்டர் விளையாட்டு மையங்கள் உள்ளன. ஒரு மையத்தில் சென் ரோங்யூ என்ற 21 வயது வாலிபர்
அடிக்கடி கம்ப்யூட்டர் கேம் விளையாடி வந்துள்ளார். இந்நிலையில் கம்ப்யூட்டர் மையத்தில் கேம் விளையாடி கொண்டிருந்த சென் ரோங்யூ, இருக்கையில் சரிந்தபடி இறந்து கிடந்தார். அவருடைய கைகள் கம்ப்யூட்டரின் கீ போர்டையும் மவுசையும் இறுக்கமாக பிடித்தபடி இருந்தன அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் தொடர்ந்து 23 மணி நேரமாக கேம் ஆடியது தெரிய வந்தது. இதுகுறித்து அந்த மையத்தின் ஊழியர்கள் கூறுகையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ரோங்யூ இங்கு வந்து விளையாட தொடங்கினார். இங்கு வரும் பலரும் தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவார்கள். அதனால், அவர் இருக்கையில் இறந்தது தெரிய வில்லை. தூங்குகிறார் என்று நினைத்தோம். ஆனால், நீண்ட நேரம் ஆகிவிட்டார் அவரை எழுப்ப சென்றோம். அவரது உடல் சில்லிட்டு இருந்தது. உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தோம் என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக