ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

அணுமின் நிலையத்து‌க்கு எ‌திராக கூட‌ங்குள‌ம் ம‌க்க‌ள் 143 பேர் மொட்டை !

கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்குழுவில் 143 பேர் மொட்டை அடி‌த்து‌க் கொ‌ண்டதோடு, கறுப்புக் கொடி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் பேரணி நட‌த்‌தின‌ர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் அணுமின் நிலையத்தை மூடக்கோரி கடற்கரையோர கிராம மக்கள் பல்வேறு
கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கடற்கரையோர கிராம மக்கள் கூட்டப்புளி விலக்கில் இரு‌ந்துஆண்களும், பெண்களும் கறுப்பு கொடி ஏந்தியபடி லெவிஞ்சிபுரம் விலக்குக்கு வந்தடைந்து அணுமின் நிலையத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். லெவிஞ்சிபுரம் விலக்கு பகுதிக்கு ஊர்வலம் வந்ததும் அணுமின் நிலையத்தை மூடக் கோரியும், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் 143 பேர் மொட்டை போட்டனர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், நிர்வாகிகள் புஷ்பராயன், மைபா ஜேசுராஜ், முகிலன், ராஜலிங்கம் உள்பட 143 பேர் மொட்டை போட்டவர்களில் அடங்குவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக