ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

10 நாள் இடைநீக்கம் எதிரொலி : அரச காரை திருப்பி ஒப்படைத்தார் விஜயகாந்த் !

தமிழக சட்ட பேரவையிலிருந்து தன்னை இடைநீக்கம் செய்ததன் எதிரொலியாக, தனக்கு வழங்கப்பட்டிருந்த அரச காரை திருப்பி ஒப்படைத்துள்ளார் விஜயகாந்த். கடந்த முதலாம் திகதி, சட்டபேரவை கூட்டத்தொடரின் போது, ஏற்பட்ட வாக்குவாதமொன்றில், ஆவேசமாக கைநீட்டி பேசினார் விஜயகாந்த். இது சட்டபேரவையை அவமரியாதைக்கு உள்ளாக்கும் செயல் என கூறி 10 நாட்கள்அவைநடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.


இதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையிலும், சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், வழங்கப்பட்டுள்ள எந்தவிதமான ஆதாயத்தையும், ஊதியத்தையும், சலுக்லைகளையும் குறித்த காலத்தில் பெற முடியாது எனும் விதிமுறை உள்ளதால் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் தமிழக அரசு தமக்கு வழங்கியிருந்த அரசு காரை தனது உதவியாளர் மூலம் மீண்டும் தலைமைமை செயலக உரிய அதிகாரியிடம் விஜயகாந்த் ஒப்படைத்தார்.

எனினும், அரசு தரப்பினால் இவ்வாறு காரை ஒப்படைக்குமாறு கோரப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக