ஞாயிறு, மார்ச் 03, 2013

! ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும்: ஜயேந்திரர் !

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற  துறவியர் மாநாட்டில் பேசுகிறார் காஞ்சி  பீடாதிபதி   ஸ்ரீ ஜயேந்திர சரசுவதி சுவாமிகள். உடன்  பங்கேற்ற துறவிகள்.


ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும் என்றார் காஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரசுவதி
திருச்சி திருவானைக்காவில் சனிக்கிழமைநடைபெற்ற துறவியர் மாநாட்டுக்குத் தலைமை வகித்து, மேலும் அவர் பேசியது:


ஹிந்து சமுதாயத்திலுள்ள பல்வேறு அமைப்புகள் எல்லோரும் குழுவாக சேர்ந்து, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால்தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடியும். அந்த வகையில் எல்லோரிடமும் ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் இங்கு ஹிந்து மறுமலர்ச்சி மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது.


ஹிந்துக்களில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் தேர்தல் சமயத்தில் அனைவரும் ஹிந்துக்கள் என்ற உணர்வுடன் இருந்து, ஒருங்கிணைந்து வாக்களிக்க வேண்டும். ஒத்தக் கருத்துடன் அனைவரும் இருந்து நல்ல அரசை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.


மாநாட்டு அறிமுகவுரையாற்றி ஜனதா கட்சியின் தலைவர்  சுப்ரமணியன் சுவாமி பேசியது:

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும். அந்த மறுமலர்ச்சி அரசியல் மூலமாகத்தான் மேற்கொள்ளப்படும். அரசியல்களம் குருஷேத்திரம் போன்றது. தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் ஹிந்துக்களை வேட்பாளர்களை நிறுத்தி, அவர்களை பிரதிநிதிகளாக அனுப்பி வைக்க வேண்டும்.

ஹிந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து ஐக்கிய ஹிந்து முன்னணி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் சுப்ரமணியன் சுவாமி.

 இன்று பூசாரிகள் மாநாடு :
 மாநாட்டின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3) பூசாரிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பூசாரிகள் பங்கேற்கின்றனர்.3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக