வியாழன், ஆகஸ்ட் 02, 2012

கேரளா:முஸ்லிம் லீக் தொண்டர் கொலை வழக்கில் சி.பி.எம் தலைவர் கைதை கண்டித்து நாளைமுழு அடைப்பு

Kerala - P.Jayarajan arrested today in Shukkoor murder caseகண்ணூர்:முஸ்லிம் லீக் தொண்டர் ஷுக்கூர் கொலை வழக்கில் கேரள மாநில முக்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் பி.ஜெயராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றம் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.ஷுக்கூர் கொலை வழக்கில் விசாரணை நடத்த பி.ஜெயராஜனிடம் இன்று ஆஜராகுமாறு புலனாய்வு குழு உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று விசாரணைக்கு ஆஜரான ஜெயராஜனை போலீசார்
கைது செய்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 118 ஆகிய பிரிவுகளின்படி குற்றகரமான சதித்திட்டம், குற்றம் குறித்தும் அறிந்து அதனை தடுக்காமலிருந்தது ஆகிய குற்றங்கள் ஜெயராஜன் மீது சுமத்தப்பட்டுள்ளது.
ஜெயராஜன் கைது செய்யப்பட்டதை கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூ. தொண்டர்கள் போலீஸ் வாகனத்தின் மீது கல் வீசித் தாக்கினர். இவ்வழக்கில் நேற்று முன்தினம் விசாரணை செய்த டி.வி.ராஜேஷ் எம்.எல்.ஏவின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து பி.ஜெயராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜெயராஜன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கண்ணூர் மாவட்டத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமலிருக்க தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. பி.ஜெயராஜனின் கைதை கண்டித்து நாளை(வியாழக்கிழமை) சி.பி.எம் கட்சி முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக