
தொழில் ரீதியான போட்டிதான் ஜே டே கொலைக்கு காரணம் என கூறி பத்திரிகையாளர் ஜிக்னா வோராவை கைது செய்த போலீசாரின் கூற்று இதன் மூலம் தகர்ந்துள்ளது.
மும்பை போலீசில் உயர் போலீஸ் அதிகாரியின் நிழலுக தொடர்பும், கிரிக்கெட் சூதாட்டம் குறித்த தகவல்களும் ஜே டேக்கு கிடைத்ததுதான் கொலைக்கு காரணம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
நிழலுக தாதா சோட்டா ராஜன் ஜே டேயைக் கொலைச் செய்ய தனது ஆட்களுக்கு உத்தரவிட்டார். ஜே டே தன்னை மோசமாக சித்தரித்து பத்திரிகையில் எழுதினார், ஜே டேக்கு எதிராக ஜிக்னா தன்னிடம் பகையை வளர்த்தார் என்று சோட்டா ராஜன் போனில் அழைத்து கூறியதாக சில க்ரைம் ரிப்போர்டர்கள் மற்றும் ஒரு நிழலுகத்தைச் சார்ந்தவரின் வாக்குமூலத்தை தவிர வேறு எந்த ஆதாரத்தையும் ஜிக்னாவுக்கு எதிராக கண்டுபிடிக்க போலீசாரால் இயலவில்லை.
ஜே டேயின் முகவரியும், பைக் நம்பரும் தனக்கு வழங்கியது ஜிக்னா என சோட்டா ராஜன் கூறியிருந்தார். ஆனால் போதிய ஆதாரங்களை கண்டுபிடிக்க போலீஸ் மற்றும் தடவியல் நிபுணர்களால் இயலவில்லை. எட்டு மாத சிறை வாசத்திற்கு பிறகு ஜிக்னாவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஜே டேயின் கொலைக்கு யார் காரணம் என்ற கேள்வியுடன் மும்பை ப்ரஸ் க்ளப் நேற்றுமுன்தினம் அறிக்கை வெளியிட்டது.
பத்திரிகையாளர்களின் குரலை அடக்கவே ஜிக்னாவை குற்றவாளியாக சேர்த்து போலீஸ் கைது செய்தது என ப்ரஸ் கிளப் குற்றம் சாட்டியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக