
இதைத் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாடு நடத்த சென்னை பெருநகர காவல்துறை அனுமதி மறுத்தது. இதற்காக 11 காரணங்களையும் சென்னை காவல்துறை குறிப்பிட்டிருக்கிறது. சென்னை காவ்லதுறையின் முடிவையடுத்து இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, டெசோ மாநாட்டை நடத்த இறுதி வரை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் டெசோமாநாட்டில் விடுதலைப் புலிகள் கலந்து கொள்வர் என்ற சென்னை காவ்ல்துறையின் புகாரையும் அவர் நிராகரித்தார். ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத்தான் மாநாட்டிலும் நிறைவேற்றப் போகிறோம் என்றும் கூறியிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக