குவஹாத்தி:அஸ்ஸாமில் வகுப்புக் கலவரத்திற்கு இதுவரை ஓய்வு ஏற்படவில்லை. லோயர் அஸ்ஸாமில் மேலும் நான்குபேர் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் அதிகாரப்பூர்வமாக அஸ்ஸாம் இனக் கலவரத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. கலவரம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த மாநில அரசு மத்திய அரசுக்கு சிபாரிசுச்
செய்துள்ளது.
கொக்ராஜரில் ராணிபூலியில் மக்கள் கூட்டத்தின் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 முஸ்லிம்கள் படுகொலைச் செய்யப்பட்டனர். இரண்டு பேருக்கு கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. சிராங் மாவட்டத்தில் ஒரு இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு-உள்நாட்டு சக்திகள் இக்கலவரத்தின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார். போடோ மாவட்டங்களுடன் சேர்ந்துள்ள பகுதிகளைச் சார்ந்தோர் அகதிகள் முகாமில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளது என தெரிவித்த கோகோய், உண்மையான இந்தியர்களுக்கு மட்டுமே மறுவாழ்வு அளிப்பதாகவும், சட்டவிரோதமாக முகாமில் தங்கியிருப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
கொக்ராஜரில் 3 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய 500க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பெல்டோலியில் தேசிய நெடுஞ்சாலையை மறித்தனர். போலீஸார் மீது கல்வீச்சு நடந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக