பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதன் மூலம் அந்த புகையை சுவாசிக்கும் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, பொது இடங்களில் சிகரெட் பிடிக்க பல நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த நிலையில், தற்போது சவுதி அரேபியாவும் இதற்கு தடை விதித்துள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது. மேலும், ஓட்டல்கள், காபி ஷாப்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், பெரு வணிக
வளாகங்கள் (மால்கள்) உள்ளிட்ட இடங்களிலும் சிகரெட் பிடிக்க்கூடாது.இவை தவிர குழாய் (பைப்) மூலம் புகையிலையை திணித்து சிகரெட் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர கடைகளில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை மற்றும் சிகரெட் போன்றவை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சவுதிஅரேபியாவின் உள்துறை மந்திரியும் இளவரசருமான அகமது பின் அப்துல்லாசிஷ் பிறப்பித்துள்ளார். சிகரெட் பிடிக்க விதித்துள்ள தடை கடந்த திங்கட்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக