திங்கள், ஆகஸ்ட் 13, 2012

ரஃபா எல்லையை திறக்க முர்ஸியிடம் ஹானிய்யா கோரிக்கை !

Hanniya urges Mursi to open Rafah crossingகாஸ்ஸா:யூதர்களின் கொடிய தடைகளால் அவதியுறும் ஃபலஸ்தீன் மக்களுக்கு வெளியுலகுடன் தொடர்பு கொள்ள இருக்கும் ஒரே வழியான ரஃபா எல்லையை திறக்குமாறு இஸ்மாயீல் ஹானிய்யா, எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ஃபலஸ்தீன் மக்களுக்கான சரக்குகளை கொண்டு செல்லவும், பயணத்திற்கும் இது அத்தியவசியமாகும். மேலும் ஃபலஸ்தீன் மக்களின் வாழ்க்கையை செலவை
குறைக்கவும் இது அத்தியாவசியமானது.
ஸினாயில் நடந்த தாக்குதலுக்கும், ஃபலஸ்தீன் மக்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எகிப்தின் பாதுகாப்பை உறுதிச்செய்ய ஃபலஸ்தீன் மிக அதிகமாக கவனம் செலுத்துகிறது. இவ்வாறு ஹானிய்யா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக