செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

பாராளுமன்றத்தை நோக்கிய பேரணி: ராம்தேவ் ஆதரவாளர்களுடன் கைது !

Baba Ramdev arrested after Delhi Police stops his march to Parliamentபுதுடெல்லி:வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்கவும், ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும் கோரி சர்ச்சைக்குரிய யோகா குருவான பாபா ராம்தேவ் பாராளுமன்றத்தை நோக்கி நடத்திய பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. ராம்தேவுடன் அவரது ஆதரவாளர்கள் கைது
செய்யப்பட்டனர்.
கறுப்புப் பண மீட்பு மற்றும் வலுவான லோக்பால் மசோதா கோரி ராம்தேவ், கடந்த 9ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் அவரது ஆத்ரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் அவரது உண்ணாவிரதத்தை அரசு கண்டுகொள்ளாததால் மத்திய அரசைக் கண்டித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபடப் போவதாக ராம்தேவ் இன்று காலை அறிவித்தார். அதன்படி பாராளுமன்றத்தை நோக்கி தனது ஆதரவாளர்களுடன் புறப்பட்ட ராம்தேவை அரை கிலோ மீட்டருக்கு முன்பாக வைத்து போலீசார் கைது செய்தனர். ராம்தேவுடன் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் டெல்லி நகருக்குள் நுழைய முயன்ற ராம்தேவின் ஆதரவாளர்கள் நகர எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக