கடினமாக உழைத்து கொஞ்சமாக திருடிக்கொள்ளுங்கள் என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரப்பிரதேச பொதுப்பணித் துறை அமைச்சர் ஷிவபால் யாதவ் கூறியுள்ள அறிவுரை அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் மாமனார் உறவுமுறையான ஷிவபால் யாதவ், ஈதா மாவட்டத்தில் நடைபெற்ற தமது பொதுப் பணித்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் பேசுகையில்,"பொதுப்பணித் துறை அதிகாரிகளான உங்களுக்கு நான் சொல்வது என்னவென்றால், கடினமாக
உழையுங்கள்... கொஞ்சமாக திருடிக்கொள்ளுங்கள்.ஆனால் கொள்ளையர்கள் போன்று நடந்துகொள்ளாதீர்கள்” என்று கூறினார்.அமைச்சரின் இந்த பேச்சு உத்தரப்பிரதேச மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ஷிவபால் யாதவ் இவ்வாறு சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது முதன்முறையல்ல.கடந்த ஜூலை மாதத்தில் கூட இதுபோன்று பேசி கண்டனத்திற்குள்ளானார். |
பசுவதையை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக பேசிய அவர், "பசுவதையை தடுக்க மக்களே அவற்றை கொன்று அதை கபாப்பாக சமைத்து உண்ணலாம்.அது மிகவும் ருசியாக இருக்கும் ” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக