நியூயார்க்:அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள ஒரு குருத்வாராவில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர்; 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.இந்தியாவிலிருந்து சென்றுள்ள சீக்கிய மத போதகர் ஒருவர் மில்வாக்கி அருகே உள்ள ஓக் கிரீக் நகரில் உள்ள குருத்வாராவில் கூடியிருந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மத்தியில் நேற்று உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச் சூடு
நடத்தினர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குருத்வாராவை சுற்றி வளைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனவே, பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குருத்வாராவுக்குள் துப்பாக்கியுடன் இருந்த மர்ம நபர்களில் ஒருவர் 12 குழந்தைகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த நிலையில், அதிரடி தாக்குதல் மூலம் துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
முன்னதாக குருத்வாராவுக்குள் 3 பேர் கொண்ட கும்பல் நுழைந்ததாக கூறப்பட்ட நிலையில், ஒருவர்தான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இதனிடயே இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய தூதரகம், தாங்கள் இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு கவுன்சிலுடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக