முகாம் அமைந்துள்ள பகுதிகளில் 14,944 பேர் வயிற்றுப் போக்காலும், 23,088 பேர் காய்ச்சலாலும், 35,982 பேர் வேறு நோயாலும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளைச் சேர்ந்த 117 மருத்துவர்கள் சுகாதாரப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
8,102 பேருக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் 100க்கும் மேற்பட்டோருக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரியவந்தது. பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட 13 பேர் இதுவரை உயிரிழந்ததாகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் வரும் 16-ம் தேதி கல்வி நிறுவனங்கள் கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட இருப்பதால், முகாம்களில் தங்கி இருப்பவர்கள் தங்கள் சொந்த வீட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக