இன்றைய மியன்மார் களம் இது. ரோஹிங்யா முஸ்லிம்கள் இப்படிபட்ட
ஒரு நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். கலவரத்தின் பின்னரான பர்மாவை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது. பொளத்த மதகுருக்களின் தலைமையில் அரச இயந்திரத்தின் பரிபூரண ஆதரவுடன் நிறுவன மயப்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்ட அடுத்த வாரமே மீண்டும் ஒரு நர வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.
ஒரு நிலையில் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். கலவரத்தின் பின்னரான பர்மாவை பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது. பொளத்த மதகுருக்களின் தலைமையில் அரச இயந்திரத்தின் பரிபூரண ஆதரவுடன் நிறுவன மயப்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதம் நிகழ்த்தப்பட்ட அடுத்த வாரமே மீண்டும் ஒரு நர வேட்டையில் களமிறங்கியுள்ளனர்.
இந்த முறை இனவெறியர்கள், மதகுருக்கள், இராணுவத்தினர் பின்னகர்த்தப்பட்டு, பொலிஸாரும், புலனாய்வு பிரிவினரும் தமது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
இந்தோனேசியா, மலேசியா, பங்களாதேஷ் போன்ற இடங்களில் இருந்து முஜாஹித்கள் பலர் பர்மாவினுள் உட்பிரவேசித்ததன் பின்னரே இவர்கள் அகதி முகாம்களை வேட்டையாட முற்பட்டுள்ளனர். திடீரென செல்லும் சரபா புலனாய்வாளர்கள் 18-32 வயதிற்குட்பட்ட இளைஞர்களை கைது செய்து கொண்டு செல்கின்றனர்.
சரபா இரகசிய உளவாளிகள் முஸ்லிம்கள் போல முகாம்களில் விதைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மியன்மார் அரச விரோத கருத்துக்களை பேசி அதன்பால் ஈர்க்கப்படும் நபர்கள் பற்றிய தகவல்களை வழங்குகின்றனர். மறு நாள் இவர்கள் கைது என்ற பெயரில் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். ஒரு ஆட்டுமந்தையில் விருப்பமான ஆட்டை பிடித்து அறுப்பது போல ரோஹிங்யா முஸ்லிம்கள் இப்போது அகதி முகாம் என்ற பெயரில் உள்ள கொலை மடுவத்தில் பலியாக்கப்படுகின்றனர்.
அகதி முகாம்களில் எந்த அடிப்படை தேவைகளும் பூர்த்தி செய்யப்படாத நிலையில் பசியாலும், நோயாலும் மேலும் உருக்குலைந்து போகும் ஒரு சமூகமாக இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர். சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மியன்மாரின் பொளத்த கைதிகளை “புணர்வாழ்வு” என்ற பெயரில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இருக்கும் இடங்களிற்கு அருகாமையில் கொண்டு வந்து குடியிருத்தி சுதந்திரமாக செயற்பட அனுமதித்துள்ளது மியன்மாரிய இராணுவ அரசு. இவர்கள் கொள்ளை, களவு, கற்பழிப்பு போன்றவற்றை சுந்திரமாக மேற்கொள்வதற்கான ஒரு வாயிலாக இதனை ஏற்படுத்தியுள்ளனர்.
Oo Daung எனும் கிராமத்தில் மாலை ஆறு மணி முதல் காலை ஆறு மணி வரை முஸ்லிம்கள் விளக்கேற்ற முடியாது. மீறினால் நசாக்கா வீரர்கள் வீடுகளில் அத்துமீறி புகுந்து பணங்களை கொள்ளையடிக்கின்றனர். பெண்களை பாலியல் இம்சைக்குட்படுத்துகின்றனர்.
Maungdaw பிரதேசத்தில் Security forces (Nasaka) நினைத்தவாறு கற்பழிப்புக்களை மேற்கொள்கின்றனர். பெண்களை பிடித்து தங்கள் ட்றக் வண்டிகளில் ஏற்றி பகிரங்கமாகவே கற்பழிப்பினை மேற்கொள்கின்றனர். ஆண்களின் ஆள்காட்டி விரல்கள் கத்திகளால் வெட்டி துண்டாடப்படுகின்றன. சுமார் 900 முஸ்லிம் இளைஞர்களின் ஆள்காட்டி விரல்கள் தறிக்கப்பட்டுள்ளன.
கிராமங்கள் மட்டுமல்லாது நகரங்களிலும் நிலை பயங்கரமானதாக மாறியுள்ளது. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்கள் குறிவைக்கப்படுகின்றனர். கைது செய்யப்பட்டு பயங்கரவாதத்திற்கும், மதஅடிப்படைவாதத்திற்கும் உதவியதாக இராணுவ சட்டத்தின் கீழ் சுட்டு தள்ளப்படுகின்றனர். இதற்கு முஹம்மது அன்வர் நல்ல சாட்சி .
கலவரங்கள் ஏற்பட்டதால் அவர் ஹொங்கோங்கிலேயே தங்கி விட்டார். கடந்த இரு நாட்களிற்கு முன்னர் நாடு திரும்பினார். இவரிற்கு சொந்தமாக 03 வைர நகை கடைகள் உள்ளன. இரவில் கைது செய்யப்பட்ட அவர் அல்-காய்தா என முத்திரை குத்தப்பட்டார். பயங்கரவாதிகளின் வியாபார்தை இவர் நடாத்தினார் என சொல்லப்பட்டது. தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
இன்றைய மியன்மார் இது. தேக்கு மர வர்த்தகத்தில் ஈடுபட்ட சுமார் 115 முஸ்லிம்கள் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளனர். இதில் சோகம் என்னவென்றால் பர்மாவின் மலேசிய முஸ்லிம்கள், சீன முஸ்லிம்கள் வழக்கம் போல இயங்குகின்றனர். இனவாதம் அவர்களை அனுமதிக்கிறது. அவர்களும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி எந்த பிரக்ஞையும் அற்றவர்களாக வாழ முற்பட்டுள்ளனர்.
முஸ்லிம் நாடுகளில் உள்ள பர்மிய தூதரகம்கள் வழக்கம் போல் செயல்படுகின்றன. எந்த ஒரு முஸ்லிம் நாடும் அவர்களை திருப்பியனுப்பவில்லை. பர்மாவின் அநியாயங்களிற்கு எதிராக, ஏன் நாம் கூட பேரணிகள் நடாத்தவில்லை. பேஸ்புக்கில் ஒரு படம் போட்டாலோ அல்லது அனுதாபரீதியில் ஒரு கொமென்ட் போட்டாலோ போதும் எனும் ஏகாதிபத்தியத்தின் சிந்தனை கயிறுகளால் கட்டப்பட்டுள்ளோம்.
மீண்டும் ஒரு முறை வெட்கப்படுவதை தவிர வேறு வழியில்லை. “இஸ்லாம் வீரர்களின் மார்க்கம். கோழைகளின் புகலிடமில்லை” என்று அன்று சொன்ன மௌலானா மௌதுதி அவர்களின் வார்த்தை மியன்மாரில் மட்டுமல்ல நம் உள்ளங்களிலும் தோற்றுப்போய் நிர்வாணமாக நிற்கிறது...
நன்றி :கைபர் தளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக