தற்போது அனைவரிடத்திலும் இருக்கும் பெரும் பிரச்சனைகளில் ஒரு பிரச்சனை தான் தூக்கமின்மை. ஒரு நாள் முழுவதும் எவ்வளவு தான் கடினமான வேலை செய்தாலும், இரவில் மட்டும் தூக்கம் என்பது இல்லை என்று பெரும்பாலானோர் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். மேலும் இரவில் இப்போது தான் படுத்தது போல் தோன்றும், ஆனால் அதற்குள் விடிந்துவிடும். சிலருக்கு கனவுகள் வந்து, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடுகின்றன. இத்தகைய பிரச்சனை இருப்பவர்களுக்கு நிம்மதியான
தூக்கத்தை பெற ஒரு ஈஸியான வழி இருக்கிறது.
நிம்மதியான தூக்கத்தைப் பெற...
* இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சாப்பிட்டு தூங்கினால், நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
* கசகசாவை நன்கு அரைத்து தூள் செய்து, அதனை தினமும் படுக்கும் முன் பாலில் கலந்து சாப்பிட்டால் நிம்மதியான தூக்கம் வரும்.
* வெங்காயத்தை நெய் விட்டு வதக்கி, அதனை சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டால், தூக்கம் நன்கு வரும். மேலும் அது எலும்புகளுக்கு நல்ல வழுவைக் கொடுக்கும்.
* படுக்கும் முன் சூடு தண்ணீரில் குளித்து விட்டு தூங்கினால், தூக்கம் நன்கு வரும். குளிக்க விருப்பம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான நீரில் கால்களை சற்று நேரம் வைத்து, பின் கடுகு எண்ணெயால் சற்று நேரம் மசாஜ் செய்து தூங்கினால் நன்கு தூக்கம் வரும்.
* தர்பூசணியின் விதை மற்றும் கசகசா விதைகளை எடுத்துக் கொண்டு நன்கு நைஸாக அரைத்து, அதனை தினமும் காலை மற்றும் மாலையில் கலந்து குடித்து வந்தால், இடையூறு இல்லாத தூக்கத்தை பெறலாம்.
* பெருஞ்சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அதனை பாலுடன் சேர்த்து காய்ச்சி, தினமும் படுக்கும் முன் குடிக்க வேண்டும். அதனால் நல்ல தூக்கமானது வரும்.
* நல்ல தூக்கத்தை பெறாதவர்கள், அதிக காரமான உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவில் அவர்கள் நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
* தினமும் மாலை வேளையில் பச்சை மாம்பழ ஜூஸ் குடித்து வந்தால், அந்த ஜூஸ் இரவில் படுக்கும் போது ஒரு நல்ல தூக்கத்தை தூண்டும்.
ஆகவே தூக்கம் வராமல் அவஸ்தை படுபவர்கள், மேற்கூறியவாறு பின்பற்றி வந்தால், நல்ல நிம்மதியான தூக்கத்தை பெறலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக