வாஷிங்டன்:அமெரிக்காவின் மாநிலமான விஸ்கோன்ஸினில் ஓக் க்ரீக்கில் உள்ள சீக்கியர்களின் வழிப்பாட்டுத் தலமான குருத்வாராவில் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி ஏந்திய நபர் ஆறுபேரை சுட்டுக் கொலைச் செய்த சம்பவம் உள்நாட்டு தீவிரவாதம் என அமெரிக்க அரசு உளவுத்துறை ஏஜன்சியான எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.கொலையாளி அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் என்றும் இவருடைய பெயர் வாடி மிச்சேல் பேஜ்
சம்பவம் நிகழ்ந்தவுடன் அவ்விடத்திற்கு வருகைத் தந்த போலீஸ் கொலையாளியை சுட்டுக் கொலைச் செய்தது.
வெள்ளை நிறத்திலான டீ ஷர்ட்டும், ராணுவத்தினர் அணியும் பாண்ட்ஸும் அணிந்துகொண்டு வந்த 40 வயதான வெள்ளைக்காரனான கொலையாளி குருதுவாராவின் சமையலறை வாயிலாக உள்ளே நுழைந்துள்ளான். இவன் தனது உடலில் 9/11 தாக்குதல் படத்தை பச்சைக் குத்தியுள்ளான். துப்பாக்கிச்சூடு நடக்கும் பொழுது 400க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் குருத்வாராவில் இருந்துள்ளனர். இச்சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஸ்கோன்ஸினின் தென்கிழக்கு பகுதியில்உள்ள நகரம்தான் ஓக் க்ரீக்.
கடந்த 2 வாரங்களில் அமெரிக்காவில் நடக்கும் 2-வது துப்பாக்கிச்சூடு சம்பவம்தான் இது. முன்னர் கொலராடாவில் உள்ள திரையரங்கில் துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 9/11 தாக்குதலுக்கு பிறகு சீக்கியர்கள் பல முறை தாக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் என தவறாக புரிந்துகொண்டு அமெரிக்க தீவிரவாதிகள் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக சீக்கியர்கள் புகார் கூறுகின்றனர். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இச்சம்பவம் குறித்து தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக