வாஷிங்டன்:தடைகளை மீறி ஈரானுடன் பொருளாதார பரிவர்த்தனை நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டாண்டர்ட் சார்டர்டின் லைசன்ஸை ரத்துச் செய்வோம் என நியூயார்க் அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.ஈரானுடன் பல தடவை 25-ஆயிரம் டாலர்
மதிப்பிலான வியாபார பரிவர்த்தனைகள் நடத்தியதாகவும், போலியான பரிவர்த்தனைகளுக்கு துணை போவதாகவும் நியூயார்க் அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இக்குற்றச்சாட்டுகளை ஸ்டாண்டர் சார்டர்ட் அதிகாரிகள் மறுக்கின்றனர். தங்களுடைய 99.9 சதவீத நடவடிக்கைகளும் அமெரிக்க அரசுக்கு தெரிந்தே நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீவிரவாதிகள், போதைப்பொருள் லாபிகள், ஆயுத வியாபாரிகள் ஆகியோருக்கு ஈரானுடனான பரிவர்த்தனை மூலம் உதவிச் செய்ய கடந்த 10 ஆண்டுகளாக வங்கி அமெரிக்காவின் பொருளாதார கட்டமைப்பை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது வங்கியின் லைசன்ஸை ரத்துச் செய்வதற்கான குற்றம் என்றும், மக்களின் விருப்பங்களை பாதுகாக்க இடைக்கால நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நியூயார்க் பொருளாதார விவகார சூப்பிரண்ட் பெஞ்சமின் லோஸ்கி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக