புதுடெல்லி:ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற துவக்கப்பட்ட அன்னா டீமை கலைத்துவிட்டதாக ஹஸாரே அறிவித்துள்ளார். புதிய அரசியல் கட்சியை துவக்குவதற்கு முன்னோடியாக குழுவை ஹஸாரே கலைத்துவிட்டார் என கருதப்படுகிறது. தனது வலைப்பூவில் ஹஸாரே இத்தகவலை வெளியிட்டுள்ளார். வலுவான லோக்பால் மசோதா தயாராகாவிட்டால் எவ்வளவு காலம்
உண்ணாவிரத போராட்டம் நடத்தமுடியும்? உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவும், ஊழலை எதிர்கொள்ள மாற்று அரசியலை தேர்ந்தெடுக்கவே மக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள் என அன்னா ஹஸாரே கூறியுள்ளார். இன்று முதல் ஹஸாரே குழுவோ, மத்தியக் குழுவோ இயங்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக