திங்கள், ஆகஸ்ட் 06, 2012

மலேசியாவில் விமானம் கிளம்பிய போது கீழே குதித்த வாலிபர்

விமானம் கிளம்பும் போது திடீரென பயணி கீழே குதித்ததால் மலேசியாவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் விமானம் தாமதமானது.மலேசியாவின் மிரி மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தலைநகர் கோலாலம்பூருக்கு ஏர் ஏசியா ஏகே 5187 விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.40 மணிக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் வேகமாக
ஓடிய விமானம் வானில் மேலெழும்ப இருந்த நேரத்தில், திடீரென பயணி ஒருவர் எமர்ஜென்சி கதவை திறந்து கொண்டு கீழே குதித்தார். அதை பார்த்த மற்ற பயணிகள் அலறினர்.
உடனடியாக பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விமானம் மீண்டும் ஓடு பாதையில் நிறுத்தப்பட்டது. அதற்குள் தகவல் அறிந்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் ஓடு பாதைக்கு விரைந்து வந்து, கீழே குதித்த பயணியை சுற்றி வளைத்தனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
அவருக்கு 24 வயதிருக்கும். உடனடியாக அவரை மிரி மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின், ஒரு மணி நேரம் தாமதத்துக்கு பின், விமானம் கோலாலம்பூர் புறப்பட்டது. விமானத்தில் இருந்து குதித்தது குறித்து வாலிபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை பற்றி பெயர் விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக