
சங்க்பரிவாரின் கைப்பாவையான ராம்தேவ் மீது ஏற்கனவே பல சர்ச்சைகள் கிளம்பின. இந்நிலையில் ராம் தேவ் 4 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி சானலான சி.என்.என் – ஐ.பி.என் சேனல் மத்திய கலால் வரித்துறை இயக்குனரகத்தின் புலனாய்வு அறிக்கையை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறியிருப்பது: “பாபா ராம்தேவ், திவ்ய யோகா மந்திர் என்ற அறக்கட்டளையை நடத்தி வருகிறார். இந்த அமைப்பு, 2007 லிருந்து 2011 வரை, உறுப்பினர் சேர்க்கை மூலம், 37.98 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆனால், இதற்கான சேவை வரியான, நான்கு கோடி ரூபாயை, ராம்தேவ் செலுத்தவில்லை. இது தொடர்பாக, கான்பூரைச் சேர்ந்த கலால் வரித்துறை அதிகாரிகள், பதஞ்சலி யோகா பீடம் மற்றும் திவ்ய யோகா மந்திர் ஆகியவற்றுக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து, இந்த அமைப்புகளுக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக