
தற்போது "சின்குவா' அகராதி, வட்டார வார்த்தைகள் மற்றும் தற்போதைய தொழில் நுட்ப உலகத்தில் பயன்படுத்தக்கூடிய, சில வார்த்தைகளையும் புதிய அகராதியில் சேர்த்துள்ளது. கடினமான முயற்சிக்கு பிறகு, இந்த 700 பக்க அகராதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அகராதியை தொகுப்பதற்கு, எட்டு ஆண்டுகள் ஆனதாக, அகராதி வெளியீட்டு நிறுவன துணை ஆசிரியர் சோ ஹாங்
போ தெரிவித்துள்ளார்.அமெரிக்க வாழ் சீனர்களை, "பனானா பர்சன்' என்ற உள்ளூரில் அழைப்பார்கள். இந்த வார்த்தையும் அகராதியில் இடம் பெற்றுள்ளது. அகராதியில் உள்ள சந்தேகங்களை இணைய தளத்தின் வழியாக தெளிவு படுத்தி கொள்வதற்கும் வழி செய்யப்பட்டுள்ளது.
டியானென்மென் படுகொலை தொடர்பான வார்த்தைகள் ஜாக்கிரதையாக தவிர்க்கப்பட்டுள்ளன. ஓரின சேர்க்கையாளர்களை குறிப்பிடும், "கே' என்ற வார்த்தை இந்த அகராதியில் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் தோழர் என்ற அர்த்தம் தொணிக்கும் வகையில், "டோங்ஷி' என்ற வார்த்தை ஓரின சேர்க்கையாளர்களை அழைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
தற்காலத்தில் அதிகம் பயன்படுத்தும் மேல்நாட்டு நடைமுறைக்கான வார்த்தைகள் பைபை, சாக்லேட், சான்ட்விச் போன்றவையும் இந்த அகராதியில் இடம் பெற்றுள்ளன. நன்றியை தெரிவிக்கும் வார்த்தையான, "தேங்க்யூ' என்ற வார்த்தை சீன மொழியில் வேறு அர்த்தத்தை குறிப்பதால், இந்த அகராதியில் அதற்கு, "3க்யூ' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக