செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

முன்னாள் திமுக அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது ரூ.200 கோடி நில அபகரிப்பு புகார் !

 திமுக முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி மீது நில அபகரிப்பு புகார்  அளிக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் ரங்கா ரெட்டி.இவர் இன்று சென்னை டிஜிபி  அலுவலகத்தில் உள்ள நில அபகரிப்பு புகார் பிரிவில் மனு ஒன்றை அளித்தார். 
அதில்,"1985-ஆம் ஆண்டு தமிழக அரசு தர்ம  தோப்பு அறக்கட்டளை நிர்வாகத்திற்காக 7  ஏக்கர் 46 சென்ட் நிலத்தை வழங்கியது.இந்த நிலம் போலி பட்டா தயாரித்து விற்பனை  செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதிக்கும் தொடர்பு  உள்ளது. இதுகுறித்து, 01-08-2011 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தோம்.  ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ரூ. 200 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை பரிதி இளம்வழுதி, அவரது உதவியாளர்  ககாரியன் மற்றும் 3 பேர் சேர்ந்து போலி பட்டா தயாரித்து விற்பனை  செய்துள்ளனர்.எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்  கொள்கிறேன்" என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக