சனி, ஆகஸ்ட் 04, 2012

சிரியா அதிபர் பதவி விலக 133 நாடுகள் ஐ.நா.சபையில் ஓட்டளித்து தீர்மானம் !

சிரியா அதிபர் பதவியிலிருந்து உடனடியாக விலக வேண்டும் என ஐ.நா.பொதுச்‌சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த 19 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கிளர்ச்சியாளர்களை ஒடுக்க, சிரிய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டுள்ளன. சிரியாவுடன் பேச்சுவார்த்தை
நடத்த 6 அம்ச திட்டத்தினை செயல்படுத்த, சிறப்பு தூதராக நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.நா.பொதுச்செயலர் கோஃபி அன்னான், போதிய ஒத்துழைப்பு இல்லை என தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் நாடுகள், ஐ.நா.பொதுச்சபையில், சிரியாவிற்கு கண்டனம் தெரிவித்து ஓட்டளித்தன. நேற்று ஐ.நா. பொதுச்சபை கூடியது. இதில் பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள் நாடுகளும் பங்கேற்றன.
மொத்தம் 193 உறுப்பு நாடுகளில் 133 நாடுகள் ,சிரியா அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஓட்டளித்தன.தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக