ஞாயிறு, செப்டம்பர் 16, 2012

குற்ற உணர்வு இல்லை: இறைத்தூதரை அவமதிக்கும் திரைப்படத்தை தயாரித்த பாசிலியின் திமிர் பேச்சு !

Nakoula Basseleyநியூயார்க்:இஸ்லாத்தின் இறுதித் தூதரும், முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி(ஸல்) அவர்களை இழிவுபடுத்தும் வகையில் ‘innocence of muslims’ என்ற திரைப்படத்தைதயாரித்த நகவ்லா பாசிலி நகவ்லா என்பவன் தனக்கு இந்த திரைப்படம் தயாரித்ததுக் குறித்து குற்ற உணர்வு ஏதும் இல்லை என்று திமிராக கூறியுள்ளான். இஸ்லாத்தை இழிவுப்படுத்தும் இத்திரைப்படத்தின் காட்சிகள்யூ ட்யூபில் வெளியானதால்
முஸ்லிம் உலகம் கொதித்து எழுந்துள்ளது. பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பாசிலியின் திமிர் பேச்சு வெளியாகியுள்ளது.
எகிப்தில் ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த பாசிலி, தற்பொழுது அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் வசித்து வருகிறான். அமெரிக்காவில் இருந்து ஒலிபரப்பாகும் ஸவா என்ற ரேடியோவில் பாசிலி இதனை தெரிவித்துள்ளான். திரைப்படத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை தான் எதிர்ப்பதாக பாசிலி கூறுகிறான். 21 வயதான பாசிலியின் மகனும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளான். நிதி மோசடியில் ஒருவருட சிறைத் தண்டனையை பெற்றவன் பாசிலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக