செவ்வாய், மார்ச் 25, 2014

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி: பலமுனைப் போட்டி

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் பலமுனை போட்டி நிலவுவதால் வாக்கு கள் சிதறும் என்று கட்சிகள் கவலை கொண்டு கலக்கம் அடைந்துள்ளன.
பலமுனை போட்டி
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் ராம நாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடானை, அறந்தாங்கி, திருச்சுழி ஆகிய 6 சட்டசபை தொகு திகள் உள்ளன. இந்த 6 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 14,17,580 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த பாராளுமன்ற தேர்தலை விட தற்போது 2,85,839 வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர்.
பாராளுமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் வருகிற 29–ந்தேதி தொடங்க உள்ள நிலையில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க. வேட்பாளராக அன்வர்ராஜா, தி.மு.க. வேட்பா ளராக முகம்மது ஜலீல், பா.ஜ.க. வேட்பாளராக குப்புராமு, இந்திய கம்யூனிஸ்ட்டு வேட்பாளராக உமாமகேசுவரி, காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக் கரசர், எஸ்.டி.பி.ஐ. வேட்பாளராக நூர்ஜியா வுதீன், தேசிய பார்வர்டு பிளாக் வேட்பாளராக அரசகுமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுள்ள நிலவரப்படி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி பலமுனைப் போட்டியை சந்திக்க தயாராகி விட்டது. ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் பலம் வாய்ந்த வர்களாக இருப்பதால் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் போட்டிபோட்டு பல்வேறு வியூகம் வகுத்து வாக்குசேகரிப்பில் தீவிர மாக ஈடுபட்டு வருகின்றனர். ராமநாதபுரம் தொகு தியில் வெற்றி பெறும் கட்சி அல்லது அதன் கூட் டணி கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுவதால் கட்சியின் முக்கிய தலைவர்கள் ராமநாதபுரம் தொகுதி மீது தனிக்கவனம் செலுத்தி பிரசாரம் செய்ய நேரம் ஒதுக்கி உள்ளனர்.
கட்சிகள் கவலை
மேலும் போட்டி போட்டு கட்சிகளின் நட்சத் திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் களம் இறக்கப் பட்டுள்ளனர். இதன் காரணமாக ராமநாதபுரம் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் பலமுனைப்போட்டி காரணமாக வாக்குகள் சிதறிவிடும் என்று அனைத்து கட்சிகளும் கவலை கொண்டு கலக்கம் அடைந் துள்ளன. இந்த கடும் போட்டியை மனதில் கொண்டு அனைத்து வேட்பாளர்களும், அரசியல் கட்சி தொண்டர்களும் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக