செவ்வாய், ஜனவரி 10, 2012

ஈரானில் சி.ஐ.ஏ உளவாளிக்கு மரணத்தண்டனை

Hekmati_2094233c
டெஹ்ரான்:அமெரிக்காவின் ரகசிய உளவுத்துறையான சி.ஐ.ஏவுக்கு உளவு வேலை பார்த்த ஈரான் வம்சாவழியை சார்ந்த அமெரிக்க குடிமகனுக்கு மரணத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமீர் மிர்ஸா ஹிக்மதி என்ற 28 வயது இளைஞருக்கு டெஹ்ரானில் சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனையை விதித்தது. சி.ஐ.ஏவில் உறுப்பினராகி தாய்நாட்டை காட்டிக் கொடுத்து
, நாடு தீவிரவாதிகளின் கையில் சிக்கியதாக பிரம்மையை உருவாக்க முயன்றதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த மாதம் நடந்த விசாரணையில் இவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆப்கான் மற்றும் ஈராக்கில் உள்ள மையங்களில் பயிற்சி பெற்ற பிறகு ஹிக்மதி ஈரானுக்கு அனுப்பப்பட்டார் என செய்தி வெளியாகி இருந்தது.
2001-ஆம் ஆண்டு இவர் அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்தார். கடற்படையில் அரபுமொழி மொழிப் பெயர்ப்பாளராக பணியாற்றினார். ஆனால், தாய்நாட்டில் உறவினர்களை சந்திக்க ஹிக்மதி வந்ததாகவும், வழக்கு ஜோடிக்கப்பட்டது என்றும் அவரது பெற்றோர் கூறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக