இமாத் கதீர் என்னும் பெயருடைய அக்குழந்தையின் அறையில் 13 இஞ்ச் நீளமுள்ள பாம்பு கடந்த வியாழனன்று வந்துள்ளது. இளங்கன்று பயமறியாது என்ற பழமொழிக்கேற்ப அதனுடைய விளையாடிய குழந்தை, ஒருகட்டத்தில் அந்தப் பாம்பைக் கடித்து தலையை துண்டித்துள்ளது. தன்னுடைய குழந்தையின் பசியாற்ற சமையலறை சென்று பால்புட்டி
எடுத்துவந்த அதன் தாயார் அலைன், குழந்தையின் அருகே நெருங்கியபோது அக்குழந்தை பாம்பொன்றின் தலையை மென்று கொண்டிருப்பதைக் கண்டு அலறியுள்ளார்.தாயின் அலறல் குரல் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தவர்கள் கூடிவிட்டனர். அக்குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை, எனினும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைகள் செய்யப்பட்டன.
"நடந்ததை என்னால் நம்பவே முடியவில்லை" என்று அந்தத் தாயார் கூறினார்.
"ஆஹா, என்ன ஒரு அருமையான காட்சி" என்று அக்குழந்தையின் பாட்டனார் ஷாஹின் வியந்துள்ளார்.
இறையருளால், அந்தப் பாம்பு Coin Snake எனப்படும் விஷமற்ற வகைப் பாம்பாகவும் சிறியதாகவும் இருந்துள்ளது.
பொதுவாக இவ்வகைப் பாம்புகள் தங்களது இரையை இறுக்கி மூச்சுத்திணறச் செய்பவையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக