தேர்தல் முடிவுகள் குறித்து த.மு.மு.கவின் மூத்த தலைவரும், ராமநாதபுரம் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியது: ‘தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி பொதுக் குழுவில் புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
த.மு.மு.க. மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவராக ஜே.எஸ்.ரிஃபாயி, பொருளாளராக ஒ.யு.ரஹ்மத்துல்லா, த.மு.மு.க. பொதுச் செயலாளராக பி.அப்துல் ஸமது, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளராக தமீமுன் அன்ஸாரி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கட்சியின் நிர்வாக குழு மூத்த தலைவர்களாக நானும், ஹைதர் அலியும் தேர்ந்தெடுக்கப்பட்டோம்’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக