இதற்கு மற்ற இரு வகுப்பு ஆசிரியர்கள் உதவி செய்துள்ளனர். வெளியில் சொன்னால் பாம்பு உள்ள இருட்டறையில் (Dark Snake Room) அடைத்து விடுவோம் என மிரட்டி வைத்துள்ளனர்.
அதனால் குழந்தை சொல்ல அஞ்சி ஒரு நாள் பயந்து பயந்து தாயிடம் சொல்லியது. அதிர்ச்சியுற்ற பெற்றோர் குழந்தையிடம் ஆசிரியைகள் என்னென்ன பாலியல் வன்கொடுமை செய்தனர் என்பதை வாக்கு மூலமாக சிடியில் பதிவு செய்து காவல் நிலையத்தில் கொடுத்தனர்.
சி.பி.ஐ க்கு மாற்றம்:
ஆனால் புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் கடலூரைச் சேர்ந்த மனித உரிமை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த ராமலிங்கம், சென்னை உயர்நீ திமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியை மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டு வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றியது. எனினும் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று பெற்றோர் மற்றும் மனுதாரர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையை முடித்துவிட்டு 60 நாட்களுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக